9 மாசம்.. 900 மேட்ச்.. பிசிசிஐ போடும் அடேங்கப்பா திட்டம்!
மும்பை: அடுத்த 9 மாதத்தில் 900 போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாம்.
இதன் மூலம் இந்திய அணியில் இணைந்து ஆடும் வாய்ப்பு பல இளம் வீரர்களுக்குக் கிடைக்கும் என்றும் பிசிசிஐ கூறுகிறது. மேலும் மண்டலங்களுக்கு இடையிலான ஒரு நாள் தொடரான தியோதர் கோப்பைப் போட்ட முறையையும் மாற்றத் திட்டமிட்டுள்ளது பிசிசிஐ.
அனில் கும்ப்ளே தலைமையிலான டெக்னிக்கல் குழு கொடுத்த பரிந்துரைகளையும் அமல்படுத்தவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

தியோதர் கோப்பைப் போட்டிகள்
தியோதர் கோப்பைப் போட்டிகள் வருடா வருடம் ஜனவரி 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறும். 50 ஓவர் கொண்டதாக இந்தப் போட்டிகள் இருக்கும்.

என்கேபி சால்வே சாலஞ்சர் டிராபி போட்டி மாதிரி
என்கேபி சால்வே சாலஞ்சர் டிபாரி போட்டிகளில் உள்ளதைப் போல 3 அணிகள் தியோதர் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும். இந்த அணிகளில் ஒன்றாக விஜய் ஹஸாரே கோப்பை சாம்பியன் இடம் பெறும். இந்த அணி மற்ற 2 அணிகளுடன் மோதும்.

ஜூனியர்களுக்காக புதிய தொடர்
இளம் வீரர்களுக்காக புதிதாக ஒரு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் 3 அணிகள் இடம் பெறும். இதை தேசிய தேர்வாளர்கள் தேர்வு செய்வார்கள்.

900 போட்டிகள்
அடுத்த 9 மாதத்தில் 900 போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனால் ஏராளமான இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் இணைந்து ஆடும் வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications