ஆசியக்கோப்பை: ஓ இதுதான் விஷயமா??. இந்திய ப்ளேயிங் 11ல் வரும் தீபக் சஹார்.. பிசிசிஐ சைலண்ட்டாக திட்டம்!
மும்பை: ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தீபக் சஹாரும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ள ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அணித்தேர்வில் யாரும் எதிர்பார்க்காத வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இந்திய அணி அறிவிப்பு
பந்துவீச்சில் ஸ்பின்னர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்த போதும், வேகப்பந்துவீச்சில் 3 பேர் மட்டும் தான் சேர்க்கப்பட்டனர். அதிலும் புவனேஷ்வர் குமார் மட்டுமே அனுபவமிக்க வீரராக இருக்கிறார். அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் என இளம் வீரர்களை நேரடியாக ஆசியக்கோப்பையில் களமிறக்கியுள்ளனர். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆவேஷ் கான் அதிக ரன்களை வாரி வழங்கிய போதும், சேர்க்கப்பட்டிருக்கிறார்.

என்ன காரணம்
முழு உடற்தகுதியுடன் உள்ள நட்சத்திர வீரரான தீபக் சஹார் பேக் அப் வீரராக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளார். 6 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்தவருக்கு நேரடியாக ஆசியக்கோப்பையில் வாய்ப்பு இல்லை என காரணம் கூறப்பட்டுள்ளது. எனினும் பவர் ப்ளேவில் சிறப்பாக பவுலிங் வீசும் அவரும் மெயின் அணியில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கான வாய்ப்பை பிசிசிஐ ஏற்படுத்தியுள்ளது.

தீபக் சஹாருக்கு வாய்ப்பு
ஆசியக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஜிம்பாவேவுடன் 3 டி20 போட்டிகளில் மோதுகிறது. இந்த போட்டியில் விளையாடும் தீபக் சஹார், சிறப்பாக பவுலிங் வீசிவிட்டால், நேரடியாக அவர் மெயின் அணிக்கு மாறலாம். அதாவது ஆசியக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் அணியில் எத்தனை மாற்றங்களை வேண்டுமானாலும் செய்துக்கொள்ளலாம். அந்தவகையில் ஆவேஷ் கானை நீக்கிவிட்டு தீபக் சஹார் சேர்க்கப்படலாம்.

வெளியான தகவல்
தீபக் சஹார் ஒரு வேகப்பந்துவீச்சாளர் மட்டுமின்றி லோயர் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேனும் ஆவார். எனவே நிச்சயம் அவர் இந்தியாவின் மெயின் அணியில் சேர்க்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆவேஷ் கான் பேக் அப் வீரராக மாற்றப்படுவார்.


Click it and Unblock the Notifications