Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்.. பிரம்மாண்டமான முதல் போட்டி.. பிசிசிஐ மெகா திட்டம்!

Recommended Video

உலகின் பெரிய ஸ்டேடியம் கங்குலி மெகா திட்டம்!

அகமதாபாத் : குஜராத்தின் அகமதாபாத்தில் உருவாகிவரும் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தின் துவக்கவிழாவில் ஆசியா XI -உலக அணி XI போட்டியை நடத்த கங்குலி தலைமையிலான பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக சர்தார் படேல் ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவுறும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த ஸ்டேடியத்தின் கட்டுமானப் பணிகளை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜே ஷா பார்வையிட்டனர். மேலும் குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடனும் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

 சர்தார் படேல் ஸ்டேடியம்

சர்தார் படேல் ஸ்டேடியம்

குஜராத் ஸ்டேடியம் அல்லது மோதேரா ஸ்டேடியம் என்று அழைக்கப்பட்ட அகமதாபாத்தில் உள்ள பழமையான மைதானம் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக தற்போது உருவாகி வருகிறது. இதற்கு சர்தார் வல்லபாய் படேல் நினைவாக அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 கவாஸ்கர், கபிலுக்கு ராசியான ஸ்டேடியம்

கவாஸ்கர், கபிலுக்கு ராசியான ஸ்டேடியம்

பல்வேறு சிறப்புகளுடன் உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாகிவரும் பழமையான மோதேரா ஸ்டேடியத்தில், முன்னாள் பேட்ஸ்மேன் கவாஸ்கர் தன்னுடைய 10,000 ரன்களை கடந்த 1987ல் பூர்த்தி செய்தார். மேலும் கபில்தேவும் ரிச்சர்ட் ஹார்ட்லீயின் அதிகபட்ச விக்கெட் சாதனையான 432 விக்கெட்டுகளை கடந்த 1994ல் இங்குதான் முறியடித்தார்.

 2017ல் அடிக்கல் நாட்டப்பட்டது

2017ல் அடிக்கல் நாட்டப்பட்டது

இந்த பழைய ஸ்டேடியத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்க திட்டமிடப்பட்டு இதற்கான பணிகள் கடந்த 2015ல் துவங்கியது. மேலும் கடந்த 2017 ஜனவரி மாதத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

 1.10 லட்சம் பார்வையாளர்கள் அமரலாம்

1.10 லட்சம் பார்வையாளர்கள் அமரலாம்

ரூ. 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகிவரும் இந்த ஸ்டேடியத்தில் ஒரே நேரத்தில் 1.10 லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து போட்டிகளைகண்டு களிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

 உள்ளூர் கிரிக்கெட் சங்கம்... பயிற்சி மைதானம்...

உள்ளூர் கிரிக்கெட் சங்கம்... பயிற்சி மைதானம்...

மேலும் இந்த ஸ்டேடியத்தில் 73 கார்ப்பொரேட் பெட்டிகளும், குஜராத் கிரிக்கெட் சங்கம் மற்றும் வீரர்கள் விளையாட பயிற்சி மைதானம் உள்ளிட்டவையும் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

 பிசிசிஐ தலைவர், செயலாளர் பார்வை

பிசிசிஐ தலைவர், செயலாளர் பார்வை

அடுத்த மாதம் மார்ச் மாதத்தில் அகமதாபாத்தில் உள்ள இந்த ஸ்டேடியத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவுறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜே ஷா ஆகியோர் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டனர்.

 துவக்கவிழாவில் ஆசியா XI -உலக அணி XI போட்டி?

துவக்கவிழாவில் ஆசியா XI -உலக அணி XI போட்டி?

கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட கங்குலி மற்றும் ஜே ஷா, இதையடுத்து குஜராத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலகின் மிகப்பெரிய இந்த ஸ்டேடியத்தின் துவக்கவிழாவையொட்டி ஆசியா XI மற்றும் உலக அணி XI பங்கேற்கும் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இதற்கு ஐசிசியின் ஒப்புதலை பெறவேண்டும்.

Story first published: Wednesday, December 4, 2019, 17:24 [IST]
Other articles published on Dec 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+