ரஞ்சிக் கோப்பை உட்பட முக்கிய உள்நாட்டு தொடர்கள் ஒத்திவைப்பு.. கொரோனா அச்சுறுத்தல்.. பிசிசிஐ முடிவு!
மும்பை: கொரோனா காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த முக்கிய போட்டிகள் அனைத்தையும் பிசிசிஐ ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அடங்கி சமீப காலங்களாக தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் இந்தியா - நியூசிலாந்து தொடர், சையது முஷ்டக் அலி, விஜய் ஹசாரே கோப்பை என பல முக்கிய போட்டிகள் நடைபெற்றன.

ஆட்டங்கள் ஒத்திவைப்பு
இந்நிலையில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த உள்நாட்டு போட்டிகள் அனைத்தையும் ஒத்திவைக்கப்படுவதாக சிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ராஞ்சிக் கோப்பை, சி கே நாயுடு கோப்பை, சீனியர் மகளிர் டி20 தொடர் ஆகிய போட்டிகள் பாதிப்படைந்துள்ளன.

எந்தெந்த தொடர்கள்
ராஞ்சிக் கோப்பை மற்றும் சிகே நாயுடு கோப்பை தொடர்கள் இந்த மாதம் தொடங்கவிருந்தன. இதே போல சீனியர் மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதத்தில் தொடங்கவுள்ளதாக திட்டமிடப்பட்டிருந்தது. கடந்தாண்டே இந்த தொடர்கள் நடைபெறாமல் இருந்த சூழலில் இந்தாண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ பதில்
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிசிசிஐ, வீரர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் என பலரின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம். அதில் சமரசம் செய்ய விருப்பம் இல்லை. எனவே 3 தொடர்களும் ஒத்திவைக்கப்படுவதாக ஒருமனதாக முடிவெடுத்துள்ளோம். 2021ம் ஆண்டு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இன்றி போட்டிகளை நடத்திக்கொடுத்த அனைவருக்கும் நன்றி எனக்கூறியுள்ளது.
Recommended Video

சர்வதேச போட்டிகள்
தற்போது உள்நாட்டு தொடர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவுகள், இந்திய அணியின் பக்கம் மீதும் திரும்ப வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்கா தொடர் முடிந்தவுடன், இந்திய அணி இலங்கை அணியுடன் மோதவுள்ளது. இந்த போட்டிகள் முழுவதுமாக இந்தியாவில் தான் நடைபெறவுள்ளது என்பதால் ரசிகர்கள் பதற்றமடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications