Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

லார்ட்ஸ் இல்ல சௌதாம்ப்டன்தான்... சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியிருக்காரு!

டெல்லி : இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.

இந்த போட்டி வரும் ஜூன் 18ம் தேதி முதல் 22ம் தேதிவரை லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது.

BCCI President Ganguly confirms that Southampton will host the WTC final

ஆயினும் இந்த இறுதிப்போட்டி சௌதாம்ப்டனில் நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா கைகொண்டு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டி வரும் ஜூன் மாதம் 18ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. ஆயினும் சௌதாம்ப்டனில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது சௌதாம்ப்டனின் ஏஜியஸ் பௌல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தியுள்ளார். சௌதாம்ப்டனில் அதிகமான வசதிகள் உள்ளதால் இரு நாட்டு வீரர்களுக்கும் பயோ பபளை ஏற்படுத்துவது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டிற்கு எளிதாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,

Story first published: Tuesday, March 9, 2021, 14:13 [IST]
Other articles published on Mar 9, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+