Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அதிகார மீறல் செய்தது அம்பலம்”.. சர்ச்சையில் சிக்கிய சவுரவ் கங்குலி.. பிசிசிஐ பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: பிசிசிஐ நிர்வாகத்தில் சவுரவ் கங்குலி, தேவயின்றி சில மாற்றங்களை செய்து வந்தது அம்பலமாகியுள்ளது.

Recommended Video

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார்.. BCCI தலைவர் Ganguly மீது வைக்கப்பட்ட பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட்டில் கடந்த 3 மாதங்களாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

விராட் கோலியின் கேப்டன்சி விவகாரம், தேர்வுக்குழு விவகாரம் என அடுத்தடுத்து அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன.

புதிய பூகம்பம்

புதிய பூகம்பம்

இந்நிலையில் அணித்தேர்வின் போது கங்குலி அதிகார மீறலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சமீபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சவுரவ் கங்குலி குறித்து சர்ச்சை கருத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், அணித்தேர்வின் போது, ஒரு பிசிசிஐ அதிகாரி, தேவையின்றி தலையிடுவதாகவும், அதிகார மீறல் செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு கண்டனங்கள் கிளம்பின. முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், யார் அந்த அதிகாரி என நேரடியாக கேள்வி எழுப்பினார்.

உறுதியான குற்றச்சாட்டு

உறுதியான குற்றச்சாட்டு

தற்போது அது கங்குலி தான் என்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ-யில் கேட்கப்பட்ட போது, சவுரவ் கங்குலி, அவராக முன்வந்து தேவையில்லாத விஷயங்களில் தலையிடுகிறார். அணித்தேர்வு, கேப்டன்சி விவகாரம் என பல விஷயங்களில் அதிகார மீறல் செய்கிறார். சமீப காலமாக பிசிசிஐ நிர்வாகம் இப்படி தான் வித்தியாசமாக நடந்து வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் பதிலளித்துள்ளார்.

பிசிசிஐ விதிகள்

பிசிசிஐ விதிகள்

பிசிசிஐ விதிமுறைகளின்படி அணித்தேர்வு விவகாரங்களில் தேர்வுக்குழு மட்டுமே தலையிட வேண்டும். இறுதி முடிவுகளை அவர்களே எடுப்பார்கள். இதில் தலையிட பிசிசிஐ தலைவர், செயலாளர் என யாருக்குமே உரிமை கிடையாது. ஆனால் அதனை கங்குலி மீறியுள்ளார். இதனால் விராட் கோலியின் கேப்டன்சி விவகாரம், இந்திய அணியின் நிலவும் சர்ச்சை என அனைத்திற்கும் கங்குலி தான் காரணம் என ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

 ஆதாரமான புகைப்படங்கள்

ஆதாரமான புகைப்படங்கள்

இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும்படி, புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. பிசிசிஐ-ன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கடந்தாண்டு தேர்வுக்குழு நடைபெறுவது போல புகைப்படம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் கங்குலி பங்குபெற்றிருந்தார். இதனால் அவர், தனது பதவிக்காலத்தை எண்ண வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, February 2, 2022, 15:31 [IST]
Other articles published on Feb 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+