அடுத்த வருசம் இரண்டு ஐ.பி.எல்.. !! அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்? கங்குலி கொடுத்த டபுள் அப்டேட்..!!
கொல்கத்தா: அடுத்த வருடத்திலிருந்து 2 ஐ.பி.எல். தொடர் நடைபெற உள்ளதாக பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கங்குலி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொட்ரிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
கங்குலியிடம் இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்று கேள்வி எழுப்பபட்டது. அதில், சர்ச்சைக்கு இடம் இல்லாமல் உஷாராக கங்குலி பதில் அளித்தார்.

டெஸ்ட் கேப்டன்
இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்பு யார் கேப்டன்கள் என்பதை தேர்வுக்குழுவினர் அறிவிப்பார்கள். அடுத்த கேப்டனை முடிவு செய்வது எண் பணி கிடையாது. இருப்பினும் தேர்வுக்குழுவினர், தலைவர், செயலாளர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து உரிய நேரத்தில் அறிவிப்பார்கள்.

ஹர்திக் பாண்டியா
ஹர்திக் பாண்டியா தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, ஹர்திக் முழு உடல் தகுதியுடன் இந்திய அணிக்கு தேவை. இதனால் தான் தேர்வுக்குழுவினர் ஹர்திக் பாண்டியாவுக்கு நேரம் வழங்கி இருக்கிறார்கள். ஐ.பி.எல். தொடரில் அவர் எப்படி செயல்படுகிறார் என்பது பொருட்டே தேர்வுக்குழுவினர் முடிவு எடுப்பார்கள்.

ரஞ்சி கோப்பை
கொரோனா காலத்தில் வீரர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதைற்காக தான் ரஞ்சி கோப்பையை தள்ளி வைத்தோம். இதனால் தான் தற்போது ரஞ்சி கோப்பை போட்டிகளை குறைத்துள்ளோம். வரர்களின் ஊதியத்தையும் அதிகரித்துள்ளோம். சையது முஸ்தாக், விஜய் ஹசாரே தொடரில் வீரர்கள் விளையாடி இருப்பதால், அதற்கான போதிய ஊதியம் கிடைத்திருக்கும். இதனால் அவர்கள் பொருளாதாரம் பாதிக்கப்படாது என நம்புகிறேன்.

மகளிர் ஐ.பி.எல்.
அடுத்த ஆண்டு முதல் 2 ஐ.பி.எல். தொடர்கள் நடத்தப்பட உள்ளன. ஆடவருக்கு நடத்தும் அதே நேரத்தில் பெண்களுக்கும் பி.சி.சி.ஐ. பிரம்மாண்டமாக நடத்த உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. எத்தனை அணிகள் பங்கேற்கின்றன? அணிகளுக்கான ஏலம் இன்னும் நடைபெறவில்லை. வீராங்கனைகளுக்கு இது போன்று ஏலம் நடத்தி மகளிர் ஐ.பி.எல். நடத்த உள்ளோம் என்று பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications