பொய் பேசுறவங்க கிட்ட எதுக்கு பதில் சொல்லனும்..? அவசியம் இல்லை..!! - பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி
கொல்கத்தா: பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி, தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து முதல் முறையாக மௌனத்தை கலைத்துள்ளார்.
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் இருந்தே கங்குலி மீது பல விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வந்த வண்ணம் உள்ளன.
கங்குலியை பதவியிலிருந்து நீக்க, பி.சி.சி.ஐ.யில் இருக்கும் சிலரே உள்வேலையில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

புகைப்படத்தால் சிக்கல்
இந்த நிலையில், இந்திய அணியை தேர்வு செய்யும் கூட்டத்தில் கங்குலி பங்கேற்று, அணி தேர்வில் தலையிடுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கங்குலியும், ஜெய்ஷாவும் தேர்வுக்குழு கூட்டத்தில் இருப்பது போன்ற புகைப்படமும் வெளியானது. இதனால் கங்குலிக்கு பெரும் சிக்கல் உருவானது. கங்குலிக்கு தேர்வுக்குழுவில் என்ன வேலை என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பினர்.

கங்குலி விளக்கம்
இது தொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு கங்குலி பேட்டி அளித்துள்ளார். நான் தேர்வுக்குழுவில் பங்கேற்றது போல் ஒரு புகைப்படத்தை பார்த்தேன். அதில் கோலி, செயலாளர் ஜெய்ஷா, இணை செயலாளர் ஜெயேஷ் ஜார்ஜ் ஆகியோரும் அமர்ந்து இருந்தனர். கேப்டனாக இல்லாத கோலி ஏன் தேர்வுக்குழுவில் இருக்க வேண்டும் என்பதை யாரும் யோசிக்க கூட இல்லை.

பழைய புகைப்படம்
இது பழைய புகைப்படம்., அது தேர்வுக்குழு கூட்டமே கிடையாது. வேறு ஒரு நிகழ்வுக்காக நாங்கள் அனைவரும் கலந்திருந்தோம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இப்போது தவறாக பகிர்கிறார்கள்.. அவதூறு பரப்பும் அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுக்கும், பொய்களுக்கும் நான் ஏன் பதில் கூற வேண்டும்.
Recommended Video

ஜெய்ஷா உடன் நட்பு
இந்திய அணிக்காக 400க்கும் மேற்பட்ட சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறேன். இதனை உங்களிடம் நியாபகப்படுத்த விரும்புகிறேன். பி.சி.சி.ஐ. தலைவர் பொறுப்பு என்றால் என்ன என்பது குறித்து நன்கு தெரியும். நான் எதிலும் தலையிட வில்லை. பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா உடன் சிறப்பான உறவையே பின்பற்றி வருகிறேன். இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக எங்கள் கூட்டணி சிறப்பாக செயல்படுகிறது. கோவிட் நேரத்தில் கிரிக்கெட்டை நடத்துவது சவாலாக உள்ளது.


Click it and Unblock the Notifications