விராட் கோலி விவகாரத்தில் மௌனம் கலைத்த கங்குலி..!! இருவருக்குள் நடந்த போரில் வென்றார் கங்குலி..!!
மும்பை: நீ பெரியவனா..?? நான் பெரியவனா என்று இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த அதிகார மோதலில் இறுதியில், பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி வென்றார்.
இருவருக்கும் இடையே மோதல், இன்றோ, இல்லை 6 மாதத்திற்கு முன்போ நடந்தது அல்ல. 3,4 ஆண்டுகளுக்கு முன்பே இந்த போர் தொடங்கியது
தொடக்கத்தில் பனிப்போராக இருந்த இந்த விவகாரம், பரபரப்பாக சென்று, இறுதியில் கங்குலி வென்றார். ஆனால் உண்மையில் தோற்றது இந்திய கிரிக்கெட் தான்.

விராட் கோலி பவர்
பி.சி.சி.ஐ.யின் ஆலோசனை குழுவில் இடம்பெற்றிருந்த கங்குலி, தனது நண்பரான கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்தார். ஆனால், இதனை விரும்பாத விராட் கோலி மீண்டும் ரவி சாஸ்த்ரியை பயிற்சியாளராக தனது பவரை பயன்படுத்தி கொண்டு வந்தார். அப்போது , விராட் கோலி பி.சி.சி.ஐ.யின் நிகர் இல்லாத சக்தியின் மையமாக விளங்கினார்

காலம் மாறியது
ஏற்றிய கொடி ,இறக்கப்பட்டு தானே ஆக வேண்டும். காலம் ஓட ஓட, விராட் கோலி ஐ.சி.சி. கோப்பைகளை தவறவிட்டு வந்தார். இதனால் விராட் கோலி மீதும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் தான் பி.சி.சி.ஐ.யின் தலைவராக யாரும் எதிர்பாராத விதமாக கங்குலி வந்தார். கங்குலி வந்ததும், அவர் நேடிரயாக ரவி சாஸ்த்ரிக்கு தான் குறி வைத்தார்

கோலிக்கு சிக்கல்
இதனை புரிந்து கொண்ட ரவி சாஸ்த்ரி, பயிற்சியாளர் பொறுப்பிலருந்து விலகினார். ரவி சாஸ்த்ரி சென்றதால் அடுத்தது நமக்கு தான் குறி என்று புரிந்து கொண்ட கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். விராட் கோலியின் முடிவால் மகிழ்ச்சி அடைந்த பி.சி.சி.ஐ. ஒருநாள் போட்டியிலிருந்து கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தால் விராட் கோலி முழுமையாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.

கங்குலி பாராட்டு
இதனிடையே, பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள பதிவில், விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளதாக தெரிவித்தார். விராட் கோலி இந்திய கிரிக்கெட்டின் தோற்றத்தையே மாற்றியவர் என்று புகழாரம் சூட்டினார்.விராட் கோலியின் முடிவு அவருடைய தனிப்பட்டது என்றும், அதனை பி.சி.சி.ஐ. மதிப்பளித்து ஏற்பதாக கூறினார். இந்திய அணியின் உயர்வுக்காக விராட் கோலி வீரராக சிறப்பாக பங்களிப்பார் என்று நம்புவதாகவும் கங்குலி கூறினார்.


Click it and Unblock the Notifications