Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மருமகளால் வந்த வினை.. பிசிசிஐ தலைவர் பதவிக்கு ஆப்பு.. ரோஜர் பின்னிக்கு பறந்த நோட்டீஸ்

பெங்களூரு : பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் 36 ஆவது தலைவராக ரோஜர் பின்னி கடந்த அக்டோபர் மாதம் பதவி ஏற்றார்.

இந்த நிலையில் ரோஜர் பின்னி பொறுப்புக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதற்குள் அவருடைய மருமகளால் ரோஜர் பிண்ணிக்கு பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

அப்படி என்ன சிக்கல் இந்த சிக்கலை ஏற்படுத்தியது யார்? இதில் என்ன அரசியல் நடக்கிறது என்று தற்போது காணலாம்.

தலைவர் பதவி

தலைவர் பதவி

பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்த நிலையில் அவருடைய பதவி காலம் முடிந்தது. இந்த நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பொறுப்புக்கு வர கங்குலி முயற்சித்தார். எனினும் அவருக்குப் போதிய ஆதரவை மற்ற நிர்வாகிகள் கொடுக்காததால் அந்த வாய்ப்பு பறிபோனது. இதனை அடுத்து கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான ரோஜா பின்னி அந்த பொறுப்புக்கு ஜெய்ஷாவால் கொண்டுவரப்பட்டார். என்னதான் ரோஜர் பின்னி தலைவராக இருந்தாலும் ஜெய்ஷாவே அனைத்து பணியிலும் செயல்பட்டு வருகிறார்.

மருமகளால் தலைவலி

மருமகளால் தலைவலி

இந்த நிலையில் ரோஜர் பின்னியை பதவி விட்டு காலி செய்ய தற்போது பணிகள் தொடங்கிவிட்டது. அதற்கு பிசிசிஐயின் நிர்வாகியான வினித் சரண் என்பவர் காய் நகர்த்திருக்கிறார். அதாவது சஞ்சீவ் குப்தா என்ற நபர் ரோஜர் பின்னி மீது புகார் அளித்துள்ளார். அதில் ரோஜர் பின்னியின் மருமகளான மாயந்தி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகளுக்கான உரிமை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தனது பதவியை ரோஜர் பின்னி தவறாக பயன்படுத்தி இருக்கலாம் என்று சஞ்சய் குப்தா புகார் அளித்துள்ளார்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்த புகாரின் மீது பிசிசிஐ நிர்வாகியான வினித் சரண் ரோஜர் பின்னிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் பிசிசிஐயின் விதியை நீங்கள் மீறி இருப்பதாக தங்கள் மீது புகார் சுமத்தப்பட்டு இருக்கிறது. இது குறித்து நீங்கள் எழுத்துப்பூர்வமான விளக்கத்தை வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று க வினீத் நோட்டீஸ் வழங்கியிருக்கிறார்.இது பிசிசிஐ தலைவர் ரோஜர் பிணிக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

யார் காரணம்?

யார் காரணம்?

ரோஜர் பின்னி இந்த பொறுப்புக்கு வந்ததை பிடிக்காத சிலர் இந்த காரியத்தில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. குறிப்பாக நமக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கப்படாததால் கங்குலியே இந்த பணியை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சிக்கலை பின்னி எப்படி உடைக்க போகிறார். இதற்கு ஜெய்ஷா துணை நிற்பாரா என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். கிரிக்கெட்டை மாற்றப் போகிறேன் என்று களத்தில் குதித்த ரோஜர் பின்னி, தற்போது அவருடைய பதவியை காப்பாற்றவே நேரம் இல்லாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Story first published: Tuesday, November 29, 2022, 23:51 [IST]
Other articles published on Nov 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+