Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனாவில் இருந்து மீண்டார் சவுரவ் கங்குலி.. இன்று டிஸ்சார்ஜ்.. ஆனால் முக்கிய நிபந்தனை - விவரம்

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியின் உடல்நிலை குறித்து புதிய தகவலை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கடந்த 28ம் தேதியன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த 27ம் தேதியன்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரை உடனடியாக கொல்கத்தாவில் உள்ள வுட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

கங்குலிக்கு அங்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஏற்கனவே 2 கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுள்ள போதும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே ஒருவேளை அவருக்கு ஒமிக்ரான் தொற்றாக இருக்கலாம் என ரத்த மாதிரிகள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் கவலையில் இருந்தனர்.

உடல்நிலை எப்படி உள்ளது?

உடல்நிலை எப்படி உள்ளது?

இந்நிலையில் சவுரவ் கங்குலி கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அவருக்கு இன்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டீவ் என முடிவு வந்ததால் இன்று மதியம் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் எனத்தெரிவித்துள்ளது.

 மருத்துவர்கள் நிபந்தனை

மருத்துவர்கள் நிபந்தனை

கங்குலி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், தனது வீட்டிலேயே 14 நாட்களுக்கு குவாரண்டைனில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவரை கண்காணிக்க மருத்துவர் ஒருவரும் அவருடன் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.

Recommended Video

Ganguly உடல்நிலை எப்படி உள்ளது? Hospital Update இதோ! | OneIndia Tamil
சுவாச பிரச்சினை

சுவாச பிரச்சினை

49 வயதாகும் சவுரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இந்தாண்டின் தொடக்கத்தில் இதயப்பிரச்சி்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் சுவாச பிரச்சினை காரணமாக 2வது முறையாக ஆஞ்சியோப்ளாஸ்டி செய்துக் கொண்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, December 31, 2021, 16:29 [IST]
Other articles published on Dec 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+