For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“கஷ்டத்திலும் நல்லது என்பது இதுதானோ..” இந்திய அணியின் தொடர் கேப்டன்சி மாற்றங்கள்.. கங்குலி விளக்கம்

மும்பை: இந்திய அணியில் தொடர்ச்சியாக கேப்டன்சி மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருப்பது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

India அணியின் Top Order பற்றி Ricky Ponting கருத்து *Cricket

இந்திய கிரிக்கெட் அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணிக்கு கேப்டன்கள் மாறி கொண்டே வருகின்றனர்.

கேப்டன்சி மாற்றங்கள்

கேப்டன்சி மாற்றங்கள்

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பையில் சொதப்பியதை அடுத்து, இந்தியாவின் 3 வடிவ அணிக்கும் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு பின்னர் ரகானே, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ஷிகர் தவான், பும்ரா என மொத்தமாக 8 கேப்டன்கள் மாற்றப்பட்டுவிட்டனர்.

கங்குலியின் விளக்கம்

கங்குலியின் விளக்கம்

இந்நிலையில் இந்த தொடர் மாற்றங்கள் குறித்து சவுரவ் கங்குலி பேசியுள்ளார். அதில், ரோகித் சர்மா தான் அனைத்து வடிவ அணிக்கும் கேப்டன். ஆனால் வீரர்கள் நிறைய போட்டிகளில் விளையாடுகின்றனர், காயங்கள் ஏற்படுகின்றன. எனவே அவர்களுக்கு ஓய்வு தரப்பட வேண்டிய சூழல் உள்ளது.

30 வீரர்கள்

30 வீரர்கள்

இதனால் வாய்ப்புக்காக காத்துள்ள நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெறுகின்றனர். அந்தவகையில் இந்திய அணியில் தற்போது 30 வீரர்கள் தயாராக உள்ளனர். ஒரே நேரத்தில் சர்வதேச போட்டியை எதிர்கொள்ள எந்நேரமும் தயாராக இருப்பார்கள். வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து தொடர்களில் சிறாப்பாக விளையாடியுள்ளனர் என கங்குலி கூறியுள்ளார்.

சீனியர்கள் எச்சரிக்கை

சீனியர்கள் எச்சரிக்கை

ஒரு கேப்டன், அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து திட்டங்களை போட்டு வைப்பார். ஆனால் திடீரென கொண்டு வரப்படும் மாற்றங்களால் அனைத்தும் வீணாகும் சூழல் ஏற்படும். எனவே இதுபோன்ற முடிவுகளை பிசிசிஐ எடுப்பது நல்லதல்ல என முன்னாள் வீரர்கள் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, August 16, 2022, 20:30 [IST]
Other articles published on Aug 16, 2022
English summary
Sourav ganguly about Captaincy Changes ( கேப்டன்சி மாற்றங்கள் குறித்து சவுரவ் கங்குலி பேச்சு ) இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்படுவது குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்கம் அளித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+