Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அவங்க கிளம்பலாம்” புஜாரா - ரகானே டெஸ்ட் எதிர்காலம்.. பிசிசிஐ தலைவர் கங்குலி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: இந்திய அணியின் சீனியர் வீரர்களான சட்டீஸ்வர் புஜாரா மற்றும் ரகானே ஆகியோரின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

Recommended Video

Pujara, Rahane Face Demotion in BCCI Central Contracts | OneIndia Tamil

தென்னாப்பிரிக்க தொடரில் வழங்கப்பட்ட கடைசி டெஸ்ட் வாய்ப்பில் சீனியர் வீரர்கள் ரகானே, புஜாரா சொதப்பினர்.

அவர்கள் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் மீண்டும் வாய்ப்பளித்த ராகுல் டிராவிட்டிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ரகானே - புஜாரா

ரகானே - புஜாரா

இதனையடுத்து அவர்களுக்கு அடுத்து வரும் இலங்கை டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இம்மாதம் இறுதியில் நடைபெறுகிறது. அவர்கள் இருவருமே தென்னாப்பிரிக்க தொடரில் முக்கியமான நேரத்தில் அரைசதம் அடித்திருந்ததால், மீண்டும் ஒருமுறை வாய்ப்புக் கொடுக்கும் முடிவில் பயிற்சியாளர் டிராவிட் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

 சவுரவ் கங்குலி பதில்

சவுரவ் கங்குலி பதில்

இந்நிலையில் அதற்கு தற்போதே முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சவுரவ் கங்குலி. இதுகுறித்து பேசியுள்ள அவர், புஜாரா, ரஹானே இருவரும் ரஞ்சிக் கோப்பைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. அவர்கள் அதில் கலந்துக்கொண்டு நிறைய ரன்களை குவித்து தங்களை நிரூபித்தாக வேண்டும். சர்வதேச போட்டியில் விளையாடிவிட்டு, மீண்டும் உள்நாட்டு தொடருக்கு செல்வது ஒன்றும் எந்தவித கவுரவ பிரச்சினையும் இல்லை. ரஞ்சிக்கோப்பை மிகச்சிறந்த தொடர்.

கட்சிதமான நேரம்

கட்சிதமான நேரம்

அவர்கள் இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டை மட்டுமே நம்பியுள்ளனர். எனவே அவர்கள் ரஞ்சிக் கோப்பைக்கு சென்று, சிறப்பாக ஆடினால் தான் இனி எதிர்காலம். அடுத்த சில நாட்களுக்கு பெரியளவில் டெஸ்ட் தொடர்கள் இல்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு அவர்கள் மீண்டு வர வேண்டும் என கங்குலி தெரிவித்துள்ளார்.

ரஞ்சிக்கோப்பை தேதிகள்

ரஞ்சிக்கோப்பை தேதிகள்

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது தான் ரஞ்சிக் கோப்பை நடைபெறுகிறது. முதல் பாதி ஆட்டங்கள் பிப்ரவரி 16 முதல் மார்ச் 5ஆம் தேதி வரையிலும், இரண்டாவது பாதி ஆட்டங்கள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இருந்து தான் இந்தியாவுக்கு பல்வேறு முன்னணி வீரர்கள் கிடைத்துள்ளனர். இதே போல கடந்த 2005ம் ஆண்டு சவுரவ் கங்குலி சர்வதேச போட்டியில் இருந்து ரஞ்சிக் கோப்பைக்கு சென்று தன்னை தயார் செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 3, 2022, 20:19 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+