Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இது சும்மா டிரெய்லர் தான்மா..” பாஜகாவில் நுழைய புது ரூட் போட்ட கங்குலி.. ட்வீட்டின் உண்மை காரணம்!

கொல்கத்தா: பாஜகாவில் இணைவதற்காக ஒரு ட்வீட்டை வைத்து சவுரவ் கங்குலி பெரிய திட்டம் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதல் பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி இருந்து வருகிறார்.

Recommended Video

Ganguly-யின் Cryptic Tweet! Political Entry-யா? | Aanee's Appeal |#Trending

இவரின் தலைமையில் கொரோனா அச்சுறுத்தலையும் தாண்டி ஐபிஎல் தொடர்கள் நடைபெற்று முடிந்துவிட்டன.

 கங்குலியின் ட்வீட்

கங்குலியின் ட்வீட்

இந்த சூழலில் தான் நேற்று சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், நான் கிரிக்கெட்டிற்கு வந்து 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. இத்தனை வருடங்கள் ஆதரவு கொடுத்த மக்களுக்கு நன்றி. மக்களுக்கு உதவுவதற்காக நான் புதிய விஷயத்தை முன்னெடுக்கவுள்ளேன். எனது புதிய அவதாரத்திற்கு ஆதரவு வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

 அரசியல் என்ட்ரி

அரசியல் என்ட்ரி

இந்த ட்வீட் போடப்பட்ட சில நிமிடங்களில் பரபரப்பு வெடித்தது. ரசிகர்கள் அனைவரும் சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகி அரசியலில் களமிறங்கப்போவதாக உறுதி செய்தனர். அதுவும் பாஜகாவில் இணைகிறார் எனத் தெரிந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. புதிய கல்வி செயலியை தொடங்கவுள்ளதாகவும், அதற்கு தான் அப்படி பதிவிட்டேன் எனவும் கங்குலி விளக்கம் அளித்தார்.

 உண்மை காரணம் என்ன

உண்மை காரணம் என்ன

எனினும் இது உண்மையே கிடையாது என அரசியல் பிரமூகர்கள் சிலர் கூறுகின்றனர். கங்குலி அரசியலில் ஈடுபடுவது குறித்து சர்ச்சை எழுவது, இது முதல்முறை அல்ல. கடந்த 2021ம் ஆண்டு மேற்கு வங்க தேர்தலில் பாஜகாவின் முதல்வர் வேட்பாளராக கங்குலியை களமிறக்க பேச்சுவார்த்தை நடந்தது. மமதா பேனர்ஜியை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக கங்குலி களமிறங்குவார் என கிட்டத்தட்ட உறுதியானது. எனினும் அதன்பின்னர் கங்குலி மறுப்பு தெரிவித்து விலகி விட்டார்.

 மீண்டும் முயற்சிகள்

மீண்டும் முயற்சிகள்

ஆனால் தற்போது அதற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். கங்குலி கடந்த வாரம் தான், கொல்கத்தாவின் மைய பகுதியில் பெரிய பங்களா ஒன்றை வாங்கியிருக்கிறார். இதன் மதிப்பு சுமார் ரூ.40 கோடியாகும். இந்த செய்தி ஓய்ந்த சில நாட்களில் தான் ட்வீட் வெளியாகியுள்ளது.

சர்ச்சைகளுடைய தாக்கம்

சர்ச்சைகளுடைய தாக்கம்

விராட் கோலி விவகாரம், அணித்தேர்வில் தலையீடு என கங்குலி மீது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் உள்ளன. எனவே தற்போது பாஜகவில் இணைவதாக கூறினால் பரபரப்பு கிளம்பும். எனவே ரசிகர்களின் ரியாக்‌ஷன்கள் எப்படி உள்ளது என்பதை பார்த்த பிறகு, அரசியலில் குதிப்பது குறித்து யோசிக்க திட்டமிட்டதாக தெரிகிறது.

Story first published: Thursday, June 2, 2022, 22:49 [IST]
Other articles published on Jun 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+