Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BREAKING: சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதி.. நடிகர்கள், அரசியல்வாதிகளுக்கும் பரவலா?..திடீர் பரபரப்பு!

கொல்கத்தா: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு எங்கிருந்து பரவியது என்ற தகவல், மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான சவுரவ் கங்குலிக்கு நேற்று மாலை திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

முதலில் பொறுமை காத்த குடும்பத்தினர் பின்பு உடல்நிலை மோசமாவதை கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

BCCI president Sourav Ganguly tests positive for coronavirus, admitted in Kolkatta hospital

கொல்கத்தாவில் உள்ள வுட்லாந்து மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு உடனடியான கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவரை கண்டிப்பாக மருத்துவமனையில் அனுமதித்தே தீர வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து நேற்று இரவு முதல் கங்குலி தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வெளியான அவரின் பரிசோதனை முடிவில் கங்குலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கங்குலி வந்திருப்பது ஓமிக்ரான் வைரஸாக கூட இருக்கலாம் என்பதால் அவரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அதன் முடிவுகள் வெளிவரவுள்ளன.

அகமதாபாத் அணியின் சூதாட்ட விவகாரம் தொடர்பான பணியில் ஈடுபட்டிருந்த கங்குலி, சமீபத்தில் பெங்கால திரையுல நடிகரும், எம்.பியுமான தேவ்-ன் புதிய திரைப்படமான டோனிக் வெளியாகியிருந்தது. இதனை பார்ப்பதற்காக பிரபல நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கங்குலி சென்றிருந்தார். அங்கிருந்து அவருக்கு கொரோனா பரவி இருக்கலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Tuesday, December 28, 2021, 10:45 [IST]
Other articles published on Dec 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+