Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்வுக்குழு பதவிக்கு தோனி , சச்சின் விண்ணப்பம்.. இன்சாமம் பெயரும் வந்திருக்கு.. ஷாக் ஆன பிசிசிஐ

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வு குழுவை நியமிக்க பிசிசிஐ தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. 2019 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு இரண்டு உலகக்கோப்பை மற்றும் ஒரு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என மூன்று தொடரிலும் சொதப்பியது.

இதனால் பிசிசிஐ அந்த குழுவை அதிரடியாக நீக்கியது. ஒரே ஆண்டில் ஏழு கேப்டன்கள் மாற்றப்பட்டது, பும்ராவை டி20 உலக கோப்பை தொடருக்கு முன்பு ஆஸ்திரேலியா தொடரில் விளையாட வைத்தது என தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் புதிய பொறுப்புக்கு யார் வரப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

வரைமுறை

வரைமுறை

இந்திய அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அது தேர்வு குழுவினர்களின் கையில் தான் இருக்கிறது. எந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்? யார் சிறப்பாக விளையாடுவார் என அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து வீரர்களை தேர்வு செய்யும் பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இந்த நிலையில் புதிய தேர்வு குழுவினருக்கான வரைமுறையை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.

5 ஆண்டுக்ளுக்கு முன் ஓய்வு

5 ஆண்டுக்ளுக்கு முன் ஓய்வு

அதாவது 60 வயதுக்கு உட்பட்ட முன்னாள் வீரர்கள், குறைந்தபட்சம் இந்திய அணிக்காக 7 சர்வதேச டெஸ்ட் அல்லது 30 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் அல்லது 10 சர்வதேச ஒரு நாள் அல்லது 20 உள்ளூர் ஒருநாள் போட்டிகளில் விளையாடிருக்க வேண்டும் என்பது முக்கிய தகுதியாகும். மற்றொரு தகுதி தேர்வுக்கு குழுவுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என பிசிசிஐ அறிவித்தது.

சச்சின், தோனி பெயர்

சச்சின், தோனி பெயர்

இந்த நிலையில் தேர்வு குழு பதவிக்காக 600 விண்ணப்பங்கள் பிசிசிஐக்கு வந்தது. இதற்கு இவ்வளவு ரெஸ்பான்ஸ் என பிசிசிஐ அதிகாரிகள் ஆச்சரியத்தில் இருந்தனர். அப்போது தான் விண்ணப்பங்களை பார்க்கும் போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தோனி, சேவாக், ஆகியோர் பெயர்களில் விண்ணப்பங்கள் வந்துள்ளது. அதாவது பரவாயில்லை இந்திய தேர்வுக்குழு உறுப்பினர் பதவிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இன்சாமம் உல் ஹக் பெயரில் இருந்து விண்ணப்பம் வந்திருக்கிறது.

போலி விண்ணப்பம்

போலி விண்ணப்பம்

இதனை பார்த்ததும் பிசிசிஐ நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். அதன் பிறகு தான் தெரிந்ததும் இது அனைத்தும் போலியான நபர்கள் கிரிக்கெட் ஜாம்பவான்களின் பெயரை பயன்படுத்தி விண்ணப்பித்திருக்கிறார்கள் என்று. இதனால் அதிர்ச்சி அடைந்த பிசிசிஐ நிர்வாகிகள் போலி விண்ணப்பங்கள் அனைத்தையும் நிராகரித்து உள்ளனர். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கலாமா வேண்டாமா என்று அவர்கள் ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தான் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைவர் யார்

புதிய தலைவர் யார்

இந்தியா இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் வரும் மூன்றாம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான இந்திய அணியை அறிவிக்க வேண்டும் என்றால் தேர்வுக் குழு உடனே நியமிக்க வேண்டும். இதனால் பிசிசிஐ தனது பணியை வேகப்படுத்த உள்ளது. இன்னும் சில நாட்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு அன்று யார் அந்த புதிய பொறுப்புக்கு வர உள்ளார்கள் என்பது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பார்.

Story first published: Thursday, December 22, 2022, 22:26 [IST]
Other articles published on Dec 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+