அடேங்கப்பா..! இப்படியா நடக்கணும்..? மல்லுக்கட்டில் மிரண்டு போன பிசிசிஐ.. வாட் நெக்ஸ்ட்?
மும்பை: இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்புக்கு 2,000 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் குழுவின் பதவிக்காலம் முடிந்தது. இதையடுத்து, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசமும் ஜூலையுடன் முடிவடைந்தது. அதற்கான விண்ணப்பங்களை பார்த்த போது மயக்கம் வராதது குறை தான் பிசிசிஐக்கு. அதாவது 2,000த்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

45 நாட்கள் நீட்டிப்பு
புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும்வரை இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பதவிக்காலம் 45 நாள்கள் நீட்டிக்கப் பட்டுள்ளன. இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உள்ளிட்டோரும் மீண்டும் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

விண்ணப்பித்தவர்கள் பட்டியல்
அதேபோல், ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பயிற்சியாளரும், நியூசிலாந்தை சேர்ந்தவருமான மைக் ஹெசன் ஆகியோர் விண்ணப்பித்திருக்கின்றனர். தென் ஆப்ரிக்க முன்னாள் தொடக்க வீரர் கேரி கிர்ஸ்டனும் அப்ளிகேஷனை தட்டி விட்டிருக்கிறார்.

முன்னாள் வீரர்
முன்னாள் வீரர் ராபின் சிங், லால்சந்த் ராஜ்புத் என இந்தியாவை சேர்ந்தவர்களும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிகிறது. பந்து வீச்சாளர் பயிற்சிக்கு முன்னாள் வெங்கடேஷ் பிரசாத்தும், பீல்டிங் பயிற்சிக்கு தென் ஆப்ரிக்காவின் ஜான்டி ரோட்சும் விண்ணப்பித்துள்ளனர்.

தகவலில் உண்மையில்லை
முன்னதாக, இலங்கை அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் பயிற்சியாளருமான ஜெயவர்த்தனா, பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால், அந்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்தது.

ரவிசாஸ்திரிக்கு வாய்ப்பு?
தற்போது இருக்கும் சூழலில் யாரை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும் என்று தெரிய வில்லை. ஆனால், ரவி சாஸ்திரியே மீண்டும் பயிற்சியாளரே வரக்கூடும் என்றும் அதற்கான வாய்ப்புகளே உள்ளது என்றும் தகவல்கள் வெளியாக உள்ளன.


Click it and Unblock the Notifications