Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

‘ரெஸ்டே கிடையாதா’.. இந்திய வீரர்களுக்கு அடுத்த தலைவலி.. பிசிசிஐ போட்டுவரும் திட்டம் - முழு விவரம்!

சவுத்தாம்டன்: டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை முடித்துவிட்டு இந்திய வீரர்கள் தற்போது தான் நிம்மதியாகி இருக்கும் நிலையில் அடுத்த தலைவலி உண்டாகியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டியை நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.

இந்த தொடர் முடிவடைந்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை தற்போது இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் பக்கம் திரும்பியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடைரில் பங்கேற்கவுள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட். 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கு இன்னும் 42 நாட்கள் கால இடைவெளி உள்ளதால், இந்திய வீரர்கள் இங்கிலாந்திலேயே தான் தங்கியிருக்க போகிறார்கள்.

ஜாலி பயணம்

ஜாலி பயணம்

இந்திய அணியில் அஸ்வின், விராட் கோலி, புஜாரா, ரஹானே உள்ளிட்ட பல வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு சென்றுள்ளனர். எனவே இவர்கள் அனைவரும் டெஸ்ட் தொடருக்கான பயிற்சியை தொடங்குவதற்கு முன்னதாக குடும்பத்தினருடன் ஜாலியாக இங்கிலாந்தை வலம் வருவார்கள் எனக்கூறப்படுகிறது.

புதிய தலைவலி

புதிய தலைவலி

இந்நிலையில் அதற்கு ஆப்பு அடிக்க பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருந்ததால் இந்திய வீரர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது அந்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வீரர்களுக்கு பயோ பபுள் விதிமுறைகளை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரியின் விளக்கம்

அதிகாரியின் விளக்கம்

இதுகுறித்து தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ-ன் அதிகாரி அருண் துமால், நாங்கள் இங்கிலாந்தில் இருக்கும் சூழலை கவனித்து வருகிறோம். தற்போது வரை வீரர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவிப்பதற்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனினும் நிலைமையை பொறுத்து பிசிசிஐ முடிவெடுக்கும் எனத்தெரிவித்துள்ளார்.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

இதனிடையே இந்திய வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாகவே பிசிசிஐ செய்துவிட்டது. முதல் தடுப்பூசி இந்தியாவில் போடப்பட்ட நிலையில் 2ம் கட்ட தடுப்பூசி இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக போடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story first published: Thursday, June 24, 2021, 19:06 [IST]
Other articles published on Jun 24, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+