Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் ஏலத்திற்கான மெகா அப்டேட்.. ரசிகர்களை குஷிப்படுத்திய பிசிசிஐ.. அப்போ வேட்டை இருக்கு!

மும்பை: 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் குறித்து பிசிசிஐ மெகா அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி நடைபெறவுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டன.

ஐபிஎல் மினி ஏலம்

ஐபிஎல் மினி ஏலம்

அதன்படி 10 அணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக 87 வீரர்கள் இந்த மினி ஏலத்தில் வாங்கப்படவுள்ளனர். இதில் அதிகபட்சமாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 13 வீரர்களும், குறைந்தபட்சமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 5 வீரர்களும் தேவைப்படுகின்றனர். இதற்காக உலகம் முழுவதும் இருந்து மொத்தமாக 991 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

இறுதிப்பட்டியல் வெளியீடு

இறுதிப்பட்டியல் வெளியீடு

இந்நிலையில் அந்த 991 வீரர்களில் இருந்து 405 வீரர்களை மினி ஏலத்திற்காக தேர்வு செய்துள்ளது பிசிசிஐ. வீரர்களின் பட்டியலை ஐபிஎல் அணிகளுக்கு கொடுக்கப்படும். அதில் ஒவ்வொரு அணியும் கேட்கும் வீரர்களை தவிர மற்ற வீரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதன்படி 369 வீரர்களை பிசிசிஐ தேர்வு செய்தது. இதுமட்டுமல்லாமல் அணிகளின் கோரிக்கையை ஏற்று கூடுதலாக 36 வீரர்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பட்டியலின் விவரம்

பட்டியலின் விவரம்

அடிப்படை தொகை ரூ. 2 கோடி - 19 வீரர்கள்

அடிப்படை தொகை ரூ. 1.5 கோடி - 11 வீரர்கள்

அடிப்படை தொகை ரூ. 1 கோடி - 20 வீரர்கள்

அடிப்படை தொகை ரூ. 75 லட்சம்- 9 வீரர்கள்

அடிப்படை தொகை ரூ. 50 லட்சம்- 61 வீரர்கள்

அடிப்படை தொகை ரூ. 40 லட்சம் - 7 வீரர்கள்

அடிப்படை தொகை ரூ. 30 லட்சம் - 4 வீரர்கள்

அடிப்படை தொகை ரூ. 20 லட்சம் - 274 வீரர்கள்

அயல்நாட்டு வீரர்கள்

அயல்நாட்டு வீரர்கள்

அயல்நாட்டு வீரர்கள் என்று எடுத்துக்கொண்டால் அதிகபட்சமாக இங்கிலாந்தில் இருந்து 27 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கின்றனர். இதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்காவில் இருந்து 22 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆஸ்திரேலியாவில் இருந்து 21 வீரர்களும், வெஸ்ட் இண்டீஸில் இருந்து 20 வீரர்களும் இந்த மினி ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Story first published: Tuesday, December 13, 2022, 18:34 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+