For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் யாருக்கு தெரியுமா? அந்த கொடுமைய நீங்களே பாருங்க

மும்பை : பிசிசிஐ நேற்று இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் சம்பள விவரமும் அடக்கம்.

அதில் யாருக்கு அதிக சம்பளம் என பார்த்தால், கோலி, அஸ்வின், ரோஹித் சர்மா போன்ற முன்னணி வீரர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு ஒருவர் தனியாக நிற்கிறார்.

நீங்கள் எல்லோரும் நினைப்பது போல அது நம்ம ரவி சாஸ்திரியே தான். அது மட்டுமில்லாமல் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் கிரிக்கெட் பயிற்சியாளர் இவர் தான் என்ற தகவலும் உண்டு.

இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள விவரம். இங்கே முக்கிய வீரர்களின் சம்பளம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரவி சாஸ்திரி மற்றும் கோலி

ரவி சாஸ்திரி மற்றும் கோலி

ரவி சாஸ்திரி - 18.07.2018 முதல் 17.10.2018 வரை மூன்று மாதம் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க 2.05 கோடி முன்தொகையாக (அட்வான்ஸ் பீஸ்) பெற்றுள்ளார்.

கோலி - தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 65.06 லட்சம், ஒருநாள் தொடர் - 30.70 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்

ரோஹித், தவான், புஜாரா

ரோஹித், தவான், புஜாரா

ரோஹித் சர்மா - தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 56.96 லட்சம், ஒருநாள் தொடர் - 30.70 லட்சம், இலங்கை நிதாஸ் தொடர் - 25.13 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்

ஷிகர் தவான் - ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 1.41 கோடி, ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 1.12 கோடி, இலங்கை தொடர் - 27 லட்சம்

புஜாரா - தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 60.80 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம், ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 92.37 லட்சம், ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 1.01 கோடி

அஸ்வின், தினேஷ் கார்த்திக்

அஸ்வின், தினேஷ் கார்த்திக்

அஸ்வின் - ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 92.37 லட்சம், ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 1.01 கோடி, தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 52.70 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்

தினேஷ் கார்த்திக் - ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 60.75 லட்சம், ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 53.42 லட்சம்

மற்ற வீரர்களுக்கும்..

மற்ற வீரர்களுக்கும்..

மேலே சில வீரர்கள் பட்டியல் மட்டுமே அளித்துள்ளோம். மற்ற வீரர்களுக்கும் இதை ஒட்டியே சம்பளம் அமைந்துள்ளது. ஐசிசி தரவரிசையில் முன்னணி இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசு கூடுதலாக கிடைத்துள்ளது. அதை தவிர்த்து, ஒப்பந்த தொகை மற்றும் போட்டி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, September 10, 2018, 16:36 [IST]
Other articles published on Sep 10, 2018
English summary
BCCI released the fees or salary paid to the Indian cricket team including Virat kohli, ravi shasthri
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X