Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு கை பார்க்காம விட மாட்டாரு போலேயே.. தீவிர வலைப் பயிற்சியில் தோனி.. பிசிசிஐ வீடியோ

Recommended Video

தீவிர வலைப் பயிற்சியில் தோனி.. பிசிசிஐ வீடியோ

துபாய் : தோனி இந்த ஆசிய கோப்பை தொடரில் ரன் குவித்து தன் மீது இங்கிலாந்தில் எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று இந்திய அணி ஹாங்காங் அணியையும், நாளை பாகிஸ்தான் அணியையும் சந்திக்க உள்ளது.

இந்த நிலையில், தோனி வலைப் பயிற்சியில் படு தீவிரமாக இறங்கி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

பிசிசிஐ வெளியிட்ட தோனி வீடியோ

துபாயில் தோனி நீண்ட நேரம் வலைப் பயிற்சியில் ஈடுபடுகிறார் என கூறப்படுகிறது. பிசிசிஐ கூட அவர் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணைத்த ட்வீட்டில் "கவனத்துடன்..சரியான பகுதியிலும்" என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

என்ன பிரச்சனை?

என்ன பிரச்சனை?

இங்கிலாந்து ஒருநாள் போட்டிகளில் தோனி மெதுவாக ரன் சேர்த்தார் என்ற புகார் இருக்கிறது. மேலும் அங்கே மூன்று ஒருநாள் போட்டிகளில் 79 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடந்த சில மாதங்களாக தோனி மீது இப்படி புகார்கள் எழுவதும், அவர் ஒரு போட்டியில் அடித்து ஆடி ரன் குவித்து விட்டால் அவை வாழ்த்துக்களாக மாறுவதும் வாடிக்கையாகி வருகிறது.

தோனி ஒருநாள் போட்டிகளில் சூப்பர்

தோனி ஒருநாள் போட்டிகளில் சூப்பர்

தோனி 321 ஒருநாள் போட்டிகளில் 10046 ரன்கள் குவித்து இருக்கிறார். அவருடைய சராசரி 51.25. அவர் பத்து சதம் மற்றும் 67 அரைசதம் அடித்துள்ளார். இதில் பெரும்பாலான போட்டிகளில் அவர் 5, 6 அல்லது 7வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் பத்தாயிரம் ரன்களை கடந்த இந்தியாவின் நான்காவது பேட்ஸ்மேன் தோனி தான்.

தோனி ஆசிய தொடரில் கலக்குவாரா?

தோனி ஆசிய தொடரில் கலக்குவாரா?

தோனி இந்த ஆசிய கோப்பையில் அதிரடி காட்டி இந்திய அணியை மூத்த வீரராக வழிநடத்தி செல்ல வேண்டும் என்பதே அனைவருடைய ஆசை. இந்திய அணியின் நடுவரிசை பேட்டிங் நிலையாக இல்லாததால், அந்த இடத்தை தோனி தான் சரி செய்ய வேண்டும். மூத்த வீரரான அவர் சரியாக விளையாடினால், மொத்த அணிக்கும் அது தெம்பாக இருக்கும். குறிப்பாக, பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோனி சிறப்பாக செயல்பட வேண்டும்.

Story first published: Tuesday, September 18, 2018, 12:42 [IST]
Other articles published on Sep 18, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+