For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பெயரில் "இந்தியா" வார்த்தை கூடாது என்ற வழக்கு தள்ளுபடி.. பிசிசிஐ-க்கு நிம்மதி

மும்பை: பிசிசிஐ நடத்தும் டி20 தொடருக்கு 'இந்தியன் பிரீமியர் லீக்' என்ற பெயரைப் பயன்படுத்துவதற்கு எதிராகத் தொடரப்பட்ட பொதுநல வழக்கை கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஆஷிக் கரோத் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், பிசிசிஐ மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இது முற்றிலும் ஒரு தனியார் அமைப்பு நடத்தும் கிரிக்கெட் தொடர் என்பதால் 'இந்தியன் பிரீமியர் லீக்' என்ற பெயரைப் பயன்படுத்துவது மக்களைத் தவறாக வழிநடத்தும் சட்டவிரோதச் செயல் என்றும் அவர் வாதிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சௌமன் சென் மற்றும் நீதிபதி ஷியாம் குமார் வி.எம் ஆகியோர் அடங்கிய அமர்வு, "இந்தத் தொடர் பல ஆண்டுகளாக எவ்வித இடையூறுமின்றி வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. பல ஆண்டுகள் கழித்து, தற்போது திடீரென இது நாட்டின் அதிகாரப்பூர்வ கிரிக்கெட் தொடர் இல்லை என மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. மனுதாரரின் வாதத்தில் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை" எனக் கூறி வழக்கை உடனடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

BCCI relieved as Kerala High Court Dismisses Plea Against use of Indian Premier League Name

இதை அடுத்து பிசிசிஐ-க்கு சிக்கல் ஏற்படும் அபாயம் நீங்கியது. 2026 ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ள நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு இருந்தால், அது பல சர்ச்சைகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும்.

இதற்கிடையே, 19ஆவது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. கடந்த ஆண்டு பெங்களூரு அணியின் வெற்றி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி துயரமான சம்பவங்கள் அரங்கேறியதால், சின்னசாமி மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் நிலவியது.

“ஆர்சிபி-யை விட குறைந்த விலை.. நம்பி வாங்க சந்தோசமா போங்க”.. விற்பனைக்கு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்“ஆர்சிபி-யை விட குறைந்த விலை.. நம்பி வாங்க சந்தோசமா போங்க”.. விற்பனைக்கு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்நிலையில், கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி. பரமேஸ்வர் தலைமையில் விதான சௌதாவில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிபுணர் குழு, கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் பெங்களூரு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். நிபுணர் குழு சமர்ப்பித்த பாதுகாப்புப் பரிந்துரைகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னர், சின்னசாமி மைதானத்தில் உரியப் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் போட்டிகளை நடத்த மாநில அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது.

சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கியது கம்பீர் இல்லை.. பின்னணியில் இருந்த 4 பேர்.. ரோஹித்தும் ஒருவர்!சூர்யகுமார் யாதவை கேப்டனாக்கியது கம்பீர் இல்லை.. பின்னணியில் இருந்த 4 பேர்.. ரோஹித்தும் ஒருவர்!

Story first published: Thursday, March 19, 2026, 10:52 [IST]
Other articles published on Mar 19, 2026
English summary
BCCI relieved as Kerala High Court Dismisses Plea Against use of “"Indian Premier League” Name. The Kerala High Court has dismissed a petition challenging the name "Indian Premier League"
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+