Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக... செம அடி வாங்கப் போகும் பிசிசிஐ.. காரணம் "லோதா"!

டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் பெருமளவில் அடி வாங்கப் போகும் சூழல் உருவாகியுள்ளது. காரணம் லோதா கமிஷன் பரிந்துரைகள். சாதா நஷ்டம் இல்லை பாஸ்.. ரூ. 1600 கோடி அளவுக்கு வருவாய் குறையப் போகிறதாம்.

டிவிகளில் போட்டிகளை ஒளிபரப்பும்போது விடப்படும் விளம்பர இடைவேளைகளைக் குறைக்குமாறு லோதா கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இது பிசிசிஐயின் வருமானத்தை கடுமையாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

இதுவரை லாபத்தையும், கொள்ளை கொள்ளையாக பணக் கட்டுக்களையும் மட்டுமே பார்த்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு, லோதா கமிட்டி பரிந்துரை பெரும் இக்கட்டை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

ரூ. 2000 கோடி வருமானம்

ரூ. 2000 கோடி வருமானம்

தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வருடா வருடம் ரூ. 2000 கோடி அளவுக்கு வருவாய் வந்து கொண்டுள்ளது. பெரும்பாலும் விளம்பரம் மூலம்தான் இந்த வருமானத்தை ஈட்டுகிறது கிரிக்கெட் வாரியம்.

ஒளிபரப்பு வருமானம்

ஒளிபரப்பு வருமானம்

டிவிகளில் போட்டிகளை ஒளிபரப்ப அளிக்கப்படும் உரிமம், வி்ளம்பரங்கள் உள்ளிட்டவை மூலம்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப் பெரிய வருவாய் கிடைக்கிறது

லோதா கமிட்டி பரிந்துரை

லோதா கமிட்டி பரிந்துரை

இந்த நிலையில்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு லோதா கமிட்டி மூலம் பெரும் ஆப்பை வைத்துள்ளது சுப்ரீம் கோர்ட். லோதா கமிட்டி உத்தரவுகளையும், பரிந்துரைகளையும் கிரிக்கெட் வாரியம் அமல்செய்தே ஆக வேண்டும் என்று அது கிடுக்கிப்பிடி உத்தரவிட்டுள்ளது.

லன்ச் பிரேக்... டீ பிரேக்

லன்ச் பிரேக்... டீ பிரேக்

டிவி ஒளிபரப்பின்போது லன்ச் பிரேக், டீ பிரேக், டிரிங்ஸ் பிரேக் என அடிக்கடி பிரேக் விடுவதை கைவிடுமாறு லோதா கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இதுதான் பிசிசிஐக்கு பெரும் அடியாக வரப் போகிறது.

ரூ. 400 கோடியாக இறங்கும்

ரூ. 400 கோடியாக இறங்கும்

இந்த உத்தரவுகளை பிசிசிஐ அமல்படுத்தினால் அதன் வருவாய் செமையாக அடி வாங்கும். அதாவது ரூ. 2000 கோடியாக உள்ள வருமானம் அப்படியே சரி்ந்து ரூ. 400 கோடியாக இறங்க விடும்.

ஒரு போட்டிக்கு ரூ. 43 கோடி

ஒரு போட்டிக்கு ரூ. 43 கோடி

தற்போது இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்து வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஒரு போட்டிக்கு ரூ. 43 கோடியை கிரிக்கெட் வாரியத்திற்குத் தருகிறது. லோதா கமிட்டி பரிந்துரை அமலுக்கு வந்தால் இது ரூ. 8 முதல் 10 கோடியாக குறைந்து போய் விடும்.

மானியம் அடியாகும்

மானியம் அடியாகும்

தற்போது மாநில கிரிக்கெட் சங்களுக்கு தோராயமாக ரூ. 750 கோடி வரை மானியமாக தருகிறது கிரிக்கெட் வாரியம். அதேபோல சீனியர் அணி முதல் 16 வயதுக்குட்பட்டோருக்கான அணி வரை அனைத்து அணிகள், வீரர்களுக்கும் சம்பளம், போட்டிக் கட்டணம் என ரூ. 450 கோடி வரை அது செலவிடுகிறது. அத்தனையும் இனி அடிபடும்.

போட்டிகளை நடத்த ரூ. 350 கோடி

போட்டிகளை நடத்த ரூ. 350 கோடி

மேலும் ரஞ்சிக் கோப்பை முதல் 16 வயதுக்குட்பட்டோர் வரை என பல தரப்பட்ட போட்டிகளை கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 2000 போட்டிகளை நடத்துகிறது பிசிசிஐ. இதற்காக ரூ. 350 கோடியை செலவிடுகிறது. இது அடிபடும்.

பென்ஷனுக்கு ரூ. 25 கோடி

பென்ஷனுக்கு ரூ. 25 கோடி

முன்னாள் வீரர்களுக்கு பென்ஷன் தொகைக்காக ரூ. 25 கோடியை செலவிட்டு வருகிறது பிசிசிஐ. அது பெரும் அடி வாங்கும். பென்ஷன் திட்டத்தையே ரத்து செய்யும் நிலையும் கூட ஏற்படலாம்.

பணக்கார அந்தஸ்து பறிபோகும்

பணக்கார அந்தஸ்து பறிபோகும்

மொத்தத்தில் லோதா கமிட்டி பரிந்துரைகளை பிசிசிஐ அமல்படுத்துவதாக இருந்தால் வாரியத்தின் செயல்பாடுகள் அடியோடு பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகிலேயே பணக்கார விளையாட்டு அமைப்பு பிசிசிஐதான். அந்த அந்தஸ்து இனி பறி போகும் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

Story first published: Thursday, February 11, 2016, 10:39 [IST]
Other articles published on Feb 11, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+