“சும்மா உட்கார யாரும் காசு தரல” இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட கிடுக்குப்பிடி..இனி தப்ப முடியாது
டாக்கா: பிசிசிஐ வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் ஜாலியாக சுற்றி வந்த இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது.
இந்திய அணி தற்போது வங்கதேச அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற சூழலில் 2வது டெஸ்ட் டிசம்பர் 22ம் தேதி நடைபெறவுள்ளது.
ஒயிட் வாஷ் செய்ய வேண்டும் என்பதால் கடைசிகட்ட பயிற்சிகளில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வீரர்கள் விலகல்
வங்கதேச தொடரில் தான் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியாவின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து விலகினர். ஒருபுறம் ரோகித் சர்மா, நவ்தீப் சைனில் ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் போன்ற வீரர்கள் காயம் காரணமாக வெளியேறினர். மற்றொருபுறம் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், யுவேந்திர சாஹல் போன்றோர் ஓய்வில் இருந்து வருகின்றனர்.

புதிய நடவடிக்கை
இந்நிலையில் இந்திய வீரர்கள் அடிக்கடி ஓய்வு எனக்கூறிவிட்டு செல்வதற்கு பிசிசிஐ கிடுக்குப்பிடி போட்டுள்ளது. பிசிசிஐ-ன் தலைவராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ரோஜர் பின்னியின் நிர்வாகம், தனது முதல் பணியே வீரர்களின் காயத்தை குறைப்பது தான் என்று கூறியிருந்தது. அதன்படி பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் யாருமே ஓய்வில் இருக்கக்கூடாது என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

என்ன உத்தரவு
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், தேசிய அணியில் இருந்து ஓய்வு எனக்கூறிவிட்டு, இனி யாரும் வீட்டில் உட்கார்ந்திருக்கக்கூடாது. மாறாக அவர்கள் அனைவரும் அப்போதைக்கு என்ன உள்நாட்டு தொடர் நடந்து வருகிறதோ, அதில் பங்கேற்று விளையாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களமிறங்கிய ஸ்டார் வீரர்கள்
இந்த அறிவிப்பை அடுத்து, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், யுவேந்திர சாஹல், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெயிக்வாட் போன்ற நட்சத்திர வீரர்கள் ரஞ்சிக்கோப்பையில் களமிறங்கியுள்ளனர். இஷாந்த் சர்மா, அஜிங்கியா ரகானே போன்ற சீனியர் வீரர்கள் ஏற்கனவே ரஞ்சிக்கோப்பையில் தான் விளையாடி வருகிறார்கள். அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடும் வீரர்களுக்கு மட்டுமே இனி ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும், குறிப்பிட்ட வடிவத்தில் ஆடும் வீரர்களுக்கு மற்ற சமயங்களில் தானாக ஓய்வு கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications