இருக்காரா? இல்லையா? கே.எல்.ராகுல் vs சுப்மன்கில் பிரச்சினை.. பிசிசிஐ வீடியோவால் மேலும் ஒரு குழப்பம்
இந்தூர்: ஆஸ்திரேலியா அணியுடனான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11 குறித்து பிசிசிஐ போட்டுள்ள பதிவால் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்குமா? சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி கண்டு முன்னிலை பெற்றுள்ள சூழலில் 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்திய அணி வெற்றியை பதிவு செய்து வந்தாலும் கே.எல்.ராகுலின் ஃபார்ம் தான் ரசிகர்களுக்கு பெரும் கவலையாக உள்ளது. இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 3 இன்னிங்ஸ்களிலும் மோசமாக சொதப்பியுள்ளார்.

இந்திய ப்ளேயிங் 11
துணைக்கேப்டன் பதவியில் இருப்பதால் அவரை ப்ளேயிங் 11ல் சேர்ப்பதாக விமர்சனங்கள் எழுந்து வந்த சூழலில் அவரை அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளனர். எனினும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ராகுலின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதனால் அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற குழப்பம் எழுந்துள்ளது.

பிசிசிஐ-ஆல் குழப்பம்
இந்நிலையில் இந்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது பிசிசிஐ. இந்தூர் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சி பெறும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சேர்ந்து நீண்ட நேரமாக ஆலோசனை நடத்தியுள்ளனர். ராகுலுக்கு என்று தனி செஷன் வைத்து டிராவிட் பேட்டிங் பயிற்சி கொடுத்துள்ளார்.

இக்கட்டான சூழல்
பிசிசிஐ வெளியிட்ட அந்த வீடியோவில் சுப்மன் கில் பயிற்சி பெறும் காட்சிகள் இடம்பெறவே இல்லை. இதனால் நல்ல ஃபார்மில் இருக்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2 - 0 என முன்னிலையில் உள்ளது. எனினும் மேலும் ஒரு போட்டியில் வெற்றி கண்டால் மட்டுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும் என்ற சிக்கல் உள்ளது.

ரிஸ்க் எடுக்கும் டிராவிட்
இது ஒருபுறம் இருக்க, ராகுல் டிராவிட் ரிஸ்க் எடுக்க துணிந்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அயல்நாட்டு களங்களில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே அவரை அப்படியே விட்டுவிட மாட்டோம். ராகுலை உள்நாட்டு தொடருக்கு அனுப்ப முடியாது. தொடர்ந்து வாய்ப்பளித்து கம்பேக் தர வைப்போம் என கூறிவிட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications