Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலககோப்பை தோல்வி எதிராலி - ஒட்டுமொத்த தேர்வுக்குழுவும் கலைப்பு.. சாட்டையை சுழற்றிய பிசிசிஐ

மும்பை : டி20 உலககோப்பையில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், ஒட்டுமொத்த தேர்வுக்குழுவினரையும் பிசிசிஐ அதிரடியாக கலைத்துள்ளது.

டி20 உலககோப்பையை இந்தியா அணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவி வெளியேறியது.

இதனால், ரசிகர்களும் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், டி20 உலககோப்பை தோல்விக்கு தேர்வுக்குழுவின் தவறான அணுகுமுறையே காரணம் என்று கூறப்பட்டது.

அதிரடி நடவடிக்கை

அதிரடி நடவடிக்கை

குறிப்பாக, பும்ரா விவகாரத்தில், அவர் முழுமையாக குணம் அடையாத நிலையில், அவரை ஆஸ்திரேலிய தொடரில் விளையாட வைத்து தவறு செய்துவிட்டோம் என்று சேத்தன் சர்மா கூறினார். இப்படி தவறை வெளிப்படையாக ஒப்பு கொண்ட பிறகும், அவர் அந்த பொறப்பில் நீடிப்பது சரியல்ல என்பதால், பிசிசிஐ இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

2 டி20 உலககோப்பை

2 டி20 உலககோப்பை

2021 மற்றும் 2022 என இரண்டு உலககோப்பையையும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு தான் தேர்வு செய்தது. சேத்தன் சர்மா தலைமையிலான குழுவே விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கியதில் முக்கிய பங்கு ஆற்றியது. மேலும், பல மூத்த வீரர்களை தொடர்பு கொண்டு, நீங்கள் ஓய்வு பெற்றுவிடுங்கள், இனி உங்களை தேர்வு செய்ய மாட்டோம் என்று கூறி சர்ச்சையில் சிக்கியது.

சர்ச்சைகள்

சர்ச்சைகள்

மேலும் பிரித்வி ஷா போன்ற வீரரை காரணமே இல்லாமல் நீக்கியது, ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கியது என பல செயலிலும் ஈடுபட்டது. இவ்வளவு நாள் சவுரவ் கங்கலியின் தயவால் சேத்தன் சர்மா தலைமையிலான குழு தொடர்ந்து அந்த பணியில் இருந்தனர். தற்போது புதிய தலைமை பிசிசிஐக்கு வந்துள்ளதால், முதல் பணியாக சேத்தன் சர்மா தலைமையிலான குழுவை அதிரடியாக நீக்கியுள்ளது.

பிசிசிஐ அழைப்பு

பிசிசிஐ அழைப்பு

தற்போது புதிய தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்புக்கு விண்ணபிக்க கூறி, பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் 7 டெஸ்ட் போட்டி அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர்கள் ஆகிய தகுதி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றுவர்கள் தான் இந்த பணிக்கு விண்ணபிக்க வேண்டும் என்றும் பிசிசிஐ கூறியுள்ளது.

Story first published: Friday, November 18, 2022, 22:06 [IST]
Other articles published on Nov 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+