Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ச்சையில் சிக்கிய ஜெய்ஷா.. குஜராத் வெல்லும் நிலையில் இருந்த போது கையால் செய்கை..என்ன நடந்தது?

அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி பெறும் தருவாயில் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் மூன்று பந்துகளில் 11 ரன்கள் எடுக்க வேண்டும் என நிலை இருந்தது.

அப்போது ஜெய்ஷா செய்த ஒரு விஷயம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. பிசிசிஐ செயலாளர் பதவியில் இருக்கும் ஜெய்ஷா நேற்றைய ஆட்டத்தின் போது குஜராத் அணி வெற்றி பெற்று விடும் என்ற நிலையில் இருந்தது. அப்போது பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த ஜெய்ஷா, கையில் ஆபாசமாக ஒரு சேகை செய்தார்.

BCCI Secretary Jay shah controversial gesture during csk vs gt ipl final 2023

இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏனென்றால் ஜெய்ஷா குஜராத்தை சேர்ந்தவர். இதனால் அவருடைய அணி வெற்றி பெறும் தருவாயில் இருப்பதால் இப்படி செய்தாரா என்ற கேள்வி எழுந்தது.பிசிசிஐ நிர்வாகத்தில் இருக்கும் நபர்கள் எந்த அணிக்கும் ஆதரவு கொடுக்காமல் நடுநிலையாக செயல்பட வேண்டும்.ஆனால் ஜெய்ஷா குஜராத்துக்கு ஆதரவாக வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்று ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இன்னொரு தரப்பினர் ஜெய்ஷா அவ்வாறு செய்த பிறகு தான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. இது ஏதாவது code word ah என்று கேள்வி கேட்டு வருகின்றனர். எனினும் பெரிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் இவ்வாறு செய்கையில் ஈடுபடுவது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என்றும் பலரும் விமர்சித்து இருந்தார்கள். எனினும் சிஎஸ்கே வெற்றி பெற்றவுடன் ஜெய்ஷா எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்.

பிசிசிஐயின் முக்கிய நிர்வாகிகளும் தோனியை கட்டி அணைத்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனிடையே மும்பை ,கொல்கத்தா போன்ற வரலாற்று சிறப்புமிக்க மைதானங்கள் இருக்கும்போது அகமதாபாத்திற்கு ஏன் பிசிசிஐ முக்கியம் தருகிறது என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஜெய்ஷா குஜராத்தை சேர்ந்தவர் என்பதால் அகமதாபாத்திற்கு தேவையில்லாத முக்கியத்துவம் தரப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

Story first published: Tuesday, May 30, 2023, 16:11 [IST]
Other articles published on May 30, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+