மும்பை : உலக கிரிக்கெட்டில் மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியமாக கருதப்படுவது இந்தியாவின் பிசிசிஐ தான். உலக கிரிக்கெட்டின் அதிகார மையம் ஐசிசி இடம் தான் இருக்கிறது என்றாலும் அந்த ஐசிசி ஆட்டிப்படைக்கும் சக்தியாக பிசிசிஐ இருக்கிறது.
இதனால் இந்தியாவை பிடிக்காத சில வெளிநாட்டு ரசிகர்கள் ஐசிசியும் பிசிசிஐயும் ஒன்றுதான் என்று கூறி கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ஐசிசி யில் தற்போது அதிரடி மாற்றம் ஒன்று நடக்க இருக்கிறது. பிசிசிஐயின் செயலாளர் பதவியில் ஜெய்ஷா இருந்து வருகிறார்.

மத்திய அமைச்சர் அமித்ஷாவின் புதல்வனாக இருக்கும் ஜெய்ஷா தந்தை போலவே குஜராத் கிரிக்கெட் வாரியத்தில் தனது பயணத்தை ஆரம்பித்து கிரிக்கெட்டு தொடர்பான பல நிர்வாக அறிவை பெற்று? அதன் பிறகு பிசிசிஐயில் ஜெய்ஷா தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கி வருகிறார். பிசிசிஐ தலைவர் பொறுப்பு தான் பெரியது. தலைவர் சொல்லி தான் அனைத்து விஷயங்களும் நடக்கும். ஆனால் ஜெய்ஷா செயலாளர் பொறுப்பில் இருக்கும் போது ஒரு மறைமுக தலைவர் போல் தான் செயல்பட்டு வந்தார்.
அணி தேர்வாக இருந்தாலும் சரி, பிசிசிஐ தொடர்பான எந்த அறிவிப்பாக இருந்தாலும் சரி தலைவர் பெயர் வராமல் செயலாளரான ஜெய்ஷாவின் பெயர்தான் வரும். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்த முடித்தது. மைதானங்களை உலக தரத்திற்கு மாற்றியது? போன்ற பல விஷயங்களில் ஜெயிஷா முயற்சி எடுத்து இருக்கிறார். ஜெய்ஷாவின் முக்கிய பணியாக பார்க்கப்படுவது.
இந்தியாவில் நடைபெறும் ஐசிசி தொடருக்கு மத்திய அரசு விதிக்கப்படும் வரியை பிசிசிஐ கொடுக்காமல் ஐசிசி தான் அதையும் கொடுக்க வேண்டும் என்று விதியை மாற்ற ஒப்புக்கொள்ள வைத்தார். மேலும் ஐசிசிக்கு கிடைக்கும் வருமானத்தில் மிகப்பெரிய பங்கு பிசிசிஐக்கு தான் கிடைக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து மாற்றினார். இது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாக இருந்தாலும் உலக கிரிக்கெட்டுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பிசிசிஐ செயலாளர் என்ற பதவியில் மட்டும் இல்லாமல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் பொறுப்பிலும் ஜெய்ஷா இருந்து வந்தார்
இந்த நிலையில் ஐசிசி யின் புதிய தலைவருக்கான பொறுப்பில் ஜெயிஷா களமிறங்க இருக்கிறார். தற்போது ஐசிசியின் தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்கலே இருந்து வருகிறார். அவருடைய பதவிக்காலம் முடிவடையும் நிலையில் ஜெய்ஷா தலைவருக்கான தேர்தலில் போட்டியிடப் போகிறார். ஜெயிஷா நிற்கிறார் என்றால் நிச்சயம் அவர்தான் அந்தப் பதவிக்கு வருவார். இதன் மூலம் என் சீனிவாசன், ஷசாங் மனோகர் ஆகியவர்களுக்கு பிறகு ஐசிசி யின் தலைவராக போகும் மூன்றாவது இந்தியர் என்ற பெருமை ஜெய்ஷாவுக்கு சேரும். ஜெய்ஷா ஐசிசி தலைவராக வந்தால் பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி தொடருக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்ற அச்சம் அந்நாட்டுக்கு ஏற்பட்டு இருக்கிறது.