Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஷாவின் நடவடிக்கையால் தேர்வுக்குழுவினர் அதிர்ச்சி..!! மன கசப்பில் கேப்டன்..!!

மும்பை: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

இதற்காக கேப்டன் ரோகித் சர்மா, தேர்வுக்குழுத் தலைவர் சேத்தன் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில், பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷாவின் நடவடிக்கை, தேர்வுக்குழுவினரிடையே மன கசப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ஷா தலையீடு

ஜெய்ஷா தலையீடு

பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா, அனைத்து தொடருக்கான அணி தேர்வின் போதும் பங்கேற்று, மாற்றங்களை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேப்டன் எதாவது ஒரு வீரரை கேட்டால் அவர் எதற்கு என்று கேட்பதாகவும், தேர்வுக்குழு எதாவது வீரரை பரீசிலினை செய்தால், அதில் தலையிட்டு நிராகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

மன கசப்பு

மன கசப்பு

அரசியல் பின்புலம் மிக்க ஜெய்ஷாவின் கட்டுப்பாட்டில் தான் தற்போது பி.சி.சி.ஐ. உள்ளது. இதனால் அவர் பேச்சை கேட்காமல் இருக்க முடியவில்லை என்று தேர்வுக்குழுவினரும், கேப்டனும் புலம்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. விதிப்படி, அணியை தேர்வு செய்வதில் தேர்வுக்குழுத் தலைவருக்கும், கேப்டன் பயிற்சியாளர்களுக்கு மட்டுமே ஈடுபட முடியும். இதனை மீறி ஜெய்ஷா தலையீடு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கோலி சந்தித்தார்

கோலி சந்தித்தார்

விராட் கோலி கேப்டனாக இருக்கும் போதே இது போன்ற சூழ்நிலையை சந்தித்தாகவும் கூறப்படுகிறது. அவர் விலகியதற்கு இதுவும் ஒரு காரணம் எனற தகவல் வெளியாகியுள்ளது.ஜெய்ஷாவின் மரபு மீறிய செயல், பின்னால் வரும் நிர்வாகிகளுக்கு முன் உதாரணமாக இருப்பதாக தேர்வுக்குழவினரே முனுமுனுக்குகிறார்கள்.

எப்போது முடிவு?

எப்போது முடிவு?

ஜெய்ஷா தேர்வுக்குழு கூட்டத்தில் இருக்கும் போது கங்குலியும் கூட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஜெய்ஷா, கிரிக்கெட்டை விட்டு அரசியலுக்கு சென்றால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். அது வரை இதனை சமாளித்து தான் ஆக வேண்டும் என தேர்வுக்குழுவினரும் தங்களது பணியை செய்து வருகின்றனர்.

Story first published: Wednesday, January 26, 2022, 19:01 [IST]
Other articles published on Jan 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+