Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலககோப்பை மற்றும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி.. 19 பேர் கொண்ட உத்தேச அணி ரெடி.. ஐசிசி விடுத்த கெடு

மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது ஐசிசி இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கான உத்தேச அணியை செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்றும் இறுதி 15 பேர் கொண்ட அணியை செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என ஐசிசி கூறியுள்ளது.

BCCI Selected 19 members probables list for ICC World cup and asia cup

இந்த நிலையில் இந்திய அணி 20 பேர் கொண்ட அணியை தயார் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கேப்டன் ரோகித் சர்மா, சுப்மன் கில் தொடக்க வீரர்களாக அணியில் இருக்கிறார்கள். நடுவரிசையில் விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல் ஆகியோர் உத்தேச அணையில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆல்ரவுண்டர்கள் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல், சர்துல் தாக்கூர் அணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். வேகப்பந்து வீச்சாளராக சமி, சிராஜ், பும்ரா, உனாட்கட், முகேஷ் குமார் ஆகியோர் உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர்.சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் அணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கூடுதல் விக்கெட் கீப்பர்களாக இசான் கிஷன், சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

BCCI Selected 19 members probables list for ICC World cup and asia cup

இதேபோன்று சூரியகுமார் யாதவுக்கும் உத்தேச அணியில் இடம் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி இந்திய அணியில் ஆறு பேட்ஸ்மேன்கள் இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள், இரண்டு வேகப் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள், இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் ஐந்து வேக பந்துவீச்சாளர்கள் என மொத்தம் 19 பேர் இந்திய அணியின் உத்தேச பட்டியலில் இடம் பிடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கே எல் ராகுல் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் காயத்தைப் பொறுத்து இந்திய அணி மெயின் அணியில் சேர வாய்ப்பு இருக்கிறது. இந்த உத்தேச அணியில் இருந்து 15 பேர் மட்டுமே மெயின் அணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் இந்த அணியில் இடம்பெறாதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Story first published: Tuesday, August 8, 2023, 16:23 [IST]
Other articles published on Aug 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+