Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்வுக்குழு தலைவர் அகார்கருடன் மோதலில் ஈடுபட்ட முகமது ஷமி.. சமாதானப்படுத்திய முக்கிய உறுப்பினர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முகமது சமி தன்னுடைய உடல் தகுதியை நிரூபித்த பிறகும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தேர்வு செய்யப்படவில்லை. இது குறித்து சமி ஏற்கனவே தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

கடைசியாக சமி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடினார். அதன் பிறகு நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் சமி சேர்க்கப்படவில்லை. ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் சமி விளையாடவில்லை.

Mohammed shami

இதற்கு சமியின் உடல் தகுதி தான் காரணம் என அஜித் அகார்கர் கூறிய நிலையில் அதற்கு சமி கடும் எதிர்ப்பு தெரிவித்து பதில் அளித்து இருந்தார். அதில் தாம் உடல் தகுதியுடன் இருப்பதால்தான் ரஞ்சி கோப்பையில் விளையாடி வருவதாகவும், ஆனால் என்னுடைய உடல் தகுதி குறித்து தேர்வு குழு வீரர்களும் சொல்வது எனது வேலை கிடையாது என்றும் ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

இந்த நிலையில் தேர்வுக்குழு புதிய உறுப்பினராக முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆர்பி சிங் அண்மையில் பதவி ஏற்றார். தற்போது கொல்கத்தாவில் இருந்த சமியை நேரில் சந்தித்த ஆர்பி சிங் சுமார் அரை மணி நேரம் வரை ஆலோசனை நடத்தினார். அதில் தேர்வுக்குழு தங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது தேர்வு குழு ஏன் உங்களை இந்திய அணியில் தேர்வு செய்யவில்லை என்பது குறித்து ஆர் பி சிங் சமியிடம் விளக்கியதாக தெரிகிறது.

மேலும் வரவிருக்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சமி தேர்வு செய்யப்படுவார் என்று ஆர் பி சி யின் உறுதியளித்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அண்மையில் நடைபெற்ற உத்தரகாண்ட் அணிக்கு எதிரான ரஞ்சி டெஸ்ட் போட்டியில் சமி இரண்டு இன்னிங்ஸில் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது வென்றார். தற்போது குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சமி14 ஓவர்கள் வீசி ஆறு மெய்டன்களை ஆக்கினார். 34 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, October 26, 2025, 20:22 [IST]
Other articles published on Oct 26, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+