Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தேர்வுக்குழுவில் திடீர் ஆலோசனை.. கோலி, பண்ட், பும்ராவுக்கு எச்சரிக்கை.. டிராவிட்-க்கு புதிய சிக்கல்!

மும்பை: இந்திய அணியின் மூன்று முக்கிய வீரர்களிடம் பிசிசிஐ திடீரென ஆலோசனை நடத்தவுள்ளது.

Recommended Video

திடீர் ஆலோசனையில் தேர்வுக்குழு.. சீனியர் வீரர்களை குறிவைக்கும் BCCI *Cricket

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இதனையடுத்து ரசிகர்கள் அனைவரின் பார்வையும் அடுத்தடுத்து உள்ள தொடர்கள் மீது திரும்பியுள்ளது.

அடுத்தடுத்த போட்டிகள்

அடுத்தடுத்த போட்டிகள்

இந்திய அணி அடுத்ததாக வரும் ஜூலை 7ம் தேதி முதல் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரும், ஜூலை 12ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறவிருக்கிறது. இதற்கான அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் பிசிசிஐ தேர்வுக்குழு அதிகாரிகள் முக்கிய ஆலோசனையை நடத்தியுள்ளனர்.

அவசர ஆலோசனை

அவசர ஆலோசனை

இந்திய அணி வீரர்கள் ரிஷப் பண்ட், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஸ்பெஷல் அழைப்பு விடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் மிக முக்கிய வீரர்கள் நீங்கள் தான், எனவே அதனை மனதில் வைத்து எதிர்வரும் டி20 போட்டிகளை கையாளுங்கள் என மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதில் விராட் கோலிக்கு ஸ்பெஷல் அட்வைஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மூவருக்கும் ஓய்வு

மூவருக்கும் ஓய்வு

இதுமட்டுமல்லாமல் இந்த மூன்று வீரர்களுக்கும் வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு தரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் ஜூலை 24ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் 50 ஒவர் கிரிக்கெட்டில் ஓய்வு பெறவிருக்கின்றனர்.

டிராவிட்-க்கு சிக்கல்

டிராவிட்-க்கு சிக்கல்

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கவே இல்லை. சீனியர்களுக்கு ஓய்வு, ஜுனியர்களுக்கு வாய்ப்பு என கலவையான அணியே விளையாடி வருகிறது. இது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு தான் பெரும் சிரமம் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Wednesday, July 6, 2022, 10:20 [IST]
Other articles published on Jul 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+