நூலும் இல்லை.. வாலும் இல்லை... கோஷ்டிப் பூசலுக்கு பிசிசிஐ கொடுத்த "ரெஸ்ட்"!
சென்னை: டோணி கோஷ்டி, கோஹ்லி கோஷ்டி என இரு கோஷ்டிகளாகப் புரிந்து கும்மியடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த இரண்டு கோஷ்டிகளையும் ஒதுக்கி ஓரம் கட்டி விட்டு புதிய கோஷ்டியை உள்ளே புகுத்தி ஜிம்பாப்வேக்கு அனுப்பி வைக்கவுள்ளது இந்தய கிரிக்கெட் வாரியம்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி எந்தக் கோஷ்டிப் பூசலிலும் சிக்காத அணியாக கருதப்படுகிறது. இதில் சீனியர்கள் என்று பார்த்தால் ரஹானே, முரளி விஜய் என சிலரைக் கை காட்டலாம்.
ராகுல் டிராவிடின் அன்பையும், முழுமையான ஆதரவையும் பெற்றவர் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள அஜிங்கியா ரஹானே. டோணி, கோஹ்லி கோஷ்டி மோதலில் நடுநிலை வகிப்பவரும் கூட. எனவேதான் அவரை கேப்டனாக்கியுள்ளதாக தெரிகிறது.

பாவம் இளைஞர்கள்
முற்றிலும் இளம் வீரர்கள், வாய்ப்புக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களைப் பிடித்துக் கொண்டு வந்து இந்த அணியில் போட்டுள்ளனர். எப்படியாவது இந்திய அணியில் இடம் பெற்று நமது திறமையை நிரூபிக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

அத்தி பூத்தாற் போல
உள்ளூர்ப் போட்டிகளில் அதிக அளவில் விளையாடி, பல சாதனைகளையும், ரசிகர்களையும் பெற்ற வீரரக்ள்தான் இவர்களில் பலர். ஆனால் தேசிய அணியில் இவர்கள் இடம் பெறுவது என்பது இப்படி எப்போதாவது அத்தி பூத்தாற் போலத்தான் நடக்கிறது என்பதுதான் வேதனையானது.

யாராவது அடித்துக் கொண்டால்
யாராவது அடித்துக் கொண்டால், அவர்களுக்கு வாரியம் ரெஸ்ட் கொடுக்க முடிவெடுத்தால் மட்டுமே இந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பது கேவலத்திலும் கேவலம், படு கேவலம்.

இரண்டாம் ரக அரிசி போல
இந்திய அணி தேர்வாளர்களுக்கும், வாரியத்திற்கும் இவர்கள் இரண்டாம் ரக அரிசிதான்.. அதாவது அணிதான். ஆனால் முதல் தரமான திறமையுடன் கூடியவர்கள் இவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ரசிகர்களைக் கொண்ட திறமைப் பட்டாளம்
குறிப்பாக அம்பட்டி ராயுடு, மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, அக்ஷர் படேல், கரண் சர்மா, சந்தீப் சர்மா ஆகியோருக்கு ஐபிஎல் போட்டிகளில் தனி ரசீிகர் கூட்டமே உள்ளது.

திறமை மங்குகிறதே
ஆனால் இந்திய அணியில் இவர்கள் இடம் பெறுவது என்பது இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே. இதுவே இவர்களது திறமை மங்கிப் போக க்கியக் காரணமாகும்.

இவர்களையும் கவனிங்கப்பா
இனிமேலாவது சீனியர்களை மட்டுமே தூக்கி் பிடித்துக் கொண்டிருக்காமல், இதுபோன்ற இளம் வீரர்களுக்கும் அதிக வாய்ப்புகள் அளித்தால் கோஷ்டிப் பூசல் போன்ற பிரச்சினைகள் ஒழிந்து அணியில் ஒற்றுமை அதிகரித்து, வெற்றிகள் பெருக வாய்ப்பு கிடைக்கும்.
எப்படியோ இப்போதைக்கு கோஷ்டிப் பூசலுக்கு சற்று ரெஸ்ட் விட்டுள்ளது வாரியம்!


Click it and Unblock the Notifications