
நல்ல நேரம்
இதனால் அதிர்ச்சியடைந்த கேப்டன் டோணி, தன்மீது பழி சுமத்தப்படுவதாக அதிருப்தி தெரிவித்ததுடன், என்னை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினாலும் விளையாட தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதுகுறித்து மாஜி கிரிக்கெட் வீரர் சுரேந்தர் கண்ணா நிருபர்களிடம் கூறியதாவது: சுமார் ஏழெட்டு வருடங்களாக டோணி இந்திய அணி கேப்டனாக உள்ளார். எனவே, கேப்டனை மாற்ற இதுதான் தக்க தருணம். இந்திய அணிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்.

உற்சாகமாக இருப்பார்
புதிதாக நியமிக்கப்படும் கேப்டன், தனக்கென்று ஒரு பெயரை உருவாக்க முயற்சி செய்வார். அது இந்தியாவுக்கு நல்லதாக முடியும். புதிய வியூகங்களை செயல்படுத்துவார். புது கேப்டனிடம் நிறைய உற்சாகம் காணப்படும். அது பிற வீரர்களுக்கும் உற்சாகத்தை தந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த உதவும்.

உறுதி வேண்டும்
பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் தற்போது ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இதில் எந்த சென்டிமென்டும் இருக்க கூடாது. உலக ஒருநாள் தரவரிசையில் 8வதாக இருக்கும் ஒரு அணியிடம், 2வதாக இருக்கும் அணி தொடரை பறிகொடுத்ததை எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது.

புது கேப்டன் யார்?
இந்திய அணிக்கு விராட் கோஹ்லியோ அல்லது எக்ஸ், ஒய், இசெட் என யார் வேண்டுமானாலும் புது கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். ஒரே நபருக்கு தொடர்ந்து கேப்டன் பதவியை அளித்து வைப்பது, அணியை பின்தங்கிவிடச் செய்துவிடும். புதியவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும்.

டெஸ்டில் ரெஸ்ட்
கிரிக்கெட் என்பது தற்போது வர்த்த்கமாக்கப்பட்டுள்ளது. ஒரு வீரர் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுகிறார். ஆனால் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஆடுகிறார். ஏனெனில் டி20 போட்டிகளில் பணம் நிறைய கிடைக்கிறது. அப்படியானால், அந்த வீரரின் நோக்கம்தான் என்ன? நாட்டுக்காக அவர் ஆடுவதாக தெரியவில்லையே. நாட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு பணத்துக்குதானே முக்கியத்துவம் கொடுக்கிறார். இவ்வாறு சுரேந்தர் கண்ணா கூறினார். டோணி சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் சென்னை அணிக்காக டி20 கிரிக்கெட்டில் ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications