Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முதலில் ரிஷப் பன்ட்… இப்போ நவ்தீவ் சைனியை அனுப்பிய பிசிசிஐ… இந்திய அணிக்கு என்னாச்சு?

Recommended Video

WORLD CUP 2019 | முதலில் பன்ட், இப்போ சைனியை அனுப்பிய பிசிசிஐ- வீடியோ

லண்டன்: உலக கோப்பை அணிக்கு புதிய வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக நவ்தீப் சைனியை பிசிசிஐ இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இங்கிலாந்து உலக கோப்பையில் இந்தியா இதுவரை ஆடிய 5 ஒருநாள் போட்டிகளில் 4 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக ரத்தானது. அணியின் பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆனாலும், நடுவரிசை பேட்டிங் ஆர்டர் சற்று தடுமாறியிருப்பது, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பட்டவர்த்தனமாக தெரிந்தது. அதனை சரி செய்ய வேண்டும் என்ற எச்சரிக்கை மணியும் வெகுவாக அனைத்து தரப்பில் இருந்தும் ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

அணியில் ரிஷப் பன்ட்

அணியில் ரிஷப் பன்ட்

துவக்க வீரர் தவான், காயம் காரணமாக உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பன்ட் இந்திய அணியில் சேர்க்கப் பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அதனால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முகமது ஷமி உள்ளே சென்றார். அவரது செயல்பாடு, குறிப்பாக ஹாட்ரிக் விக்கெட் புதிய சாதனையை படைத்தது.

வீரர்களின் காயம்

வீரர்களின் காயம்

பும்ராவும் அவ்வபோது கணுக்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். பயிற்சி ஆட்டத்தின் போது விஜய் ஷங்கரும் காலில் காயம் ஏற்பட்டு பயிற்சிகளை தவிர்த்து வருகிறார். முகமது ஷமியும் 100% உடல் தகுதி கொண்டவர் அல்ல என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

வலைப் பயிற்சியில் சைனி

வலைப் பயிற்சியில் சைனி

வீரர்களின் காயம், குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தினால் அவதிப்பட்டு வரும் நிலையில் பயிற்சியின் போது சற்று ஓய்வெடுக்க, வலைப் பயிற்சியில் பந்து வீசுவும் நவ்தீப் சைனியை தற்போது இங்கிலாந்துக்கு பிசிசிஐ அனுப்பியுள்ளது.

வாய்ப்பு கிடைக்கும்

வாய்ப்பு கிடைக்கும்

அவர் ஏற்கனவே உலக கோப்பை ரிசர்வ் வரிசையில் இருக்கிறார். ஏதேனும் ஒரு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக தொடரில் இருந்து விலக நேர்ந்தால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி அடுத்து வரும் 27ம் தேதி மேற்கிந்திய தீவுகளை சந்திக்கிறது. அதன் பிறகு, இங்கிலாந்தையும், வங்கதேசம், இலங்கையையும் எதிர்கொள்கிறது.

Story first published: Tuesday, June 25, 2019, 11:34 [IST]
Other articles published on Jun 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+