Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நீ என்ன சொல்றது? ஐசிசி பவுண்டரி விதிகளை காற்றில் பறக்கவிட்ட பிசிசிஐ.. 57 மீ தூரம் தான் சார் இருக்கு

ஐதராபாத் : உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மைதானங்களில் பவுண்டரி தூரத்தை குறைந்தபட்சம் 70 மீட்டராக வைத்துக் கொள்ளுங்கள் என ஐசிசி விடுத்த உத்தரவை பிசிசிஐ காற்றில் பறக்க விட்டிருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் ஒரு நாள் போட்டிகளில் பவுண்டரி லைன்கள் மிகவும் குறைவான தூரத்தில் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதன் மூலம் 260 ரன்கள் 300 ரன்கள் அடிக்கப்பட்டு அதனை இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி சேசிங் செய்யும் அளவுக்கு மைதானங்கள் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கப்படுகிறது.

BCCI set Boundary distance for 57 meter instead of 70 meter for world cup

இதன் மூலம் பந்துவீச்சாளர்கள் கொஞ்சம் கூட இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. பேட்டிற்கும் பந்துவீச்சுக்கும் சரிசமமான போட்டி இல்லை என்றால் அது ரசிகர்களுக்கு அயற்சியை கொடுக்கும்.இதனை கருத்தில் கொண்டு தான் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பே அனைத்து மைதானங்களையும் ஆய்வு செய்த ஐசிசி அதிகாரிகள் மைதானங்களில் பவுண்டரி தூரத்தை குறைந்தபட்சம் 70 லிருந்து 75 மீட்டர் இருக்கும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி இருந்தது.

ஆனால் நீ என்ன சொல்றது நான் என்ன கேட்கிறது என்பது போல் பிசிசிஐ தற்போது செயல்பட்டு இருக்கிறது. பாகிஸ்தான் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு முனையில் 71 மீட்டர் 75 மீட்டர் என தூரம் இருந்தாலும் ஆப்சைடு பவுண்டரி வெறும் 63 மீட்டர் மட்டும்தான் இருக்கிறது. இதைப் போன்று இன்னொரு முனையில் பவுண்டரி தூரம்வெறும் 57 மற்றும் 59 மீட்டர் வரை தான் இருக்கிறது. இதைப் பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மைதானத்தில் இன்னும் தூரம் இருக்கும் நிலையில் விளம்பர பலகை வைப்பதற்கு இடம் வேண்டும் என்பதற்காக இவ்வாறு பவுண்டரி தூரத்தை பிசிசிஐ குறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு காலத்தில் பவுண்டரி அடிப்பதே மிகவும் கடினமாக இருக்கும் நிலையில் தற்போது 57 மீட்டர் தூரம் பவுண்டரி வைத்தால் பள்ளி மாணவர்கள் கூட அதில் சிக்ஸர் அடிப்பார்கள்.

அப்படி இருக்கும் போது சர்வதேச வீரர்கள் சும்மா இருப்பார்களா என்ன? ரன்கள் அதிக வேண்டும் என்றால் அதற்கு டி20 கிரிக்கெட் இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட் இதுபோன்ற செயலால் தான் அளிக்கப்படுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Friday, October 6, 2023, 14:58 [IST]
Other articles published on Oct 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+