இந்திய அணிக்கு 'பவுலிங் கோச்'- பிசிசிஐ திட்டம்

இந்திய கிரிக்கெட் அணியின் பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர்களாக இருந்த வெங்கடேஷ் பிரசாத் மற்றும் ராபின் சிங் ஆகியோர் கடந்த ஆண்டு இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கு பின்னர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை எட்டி விட்டாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி கடுமையாக போராட வேண்டியுள்ளது.
குறிப்பாக பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையி்ல இந்திய அணி இன்னும் அதிகமான திறமையை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
அணியின் கேப்டன் தோனியும் இதுகுறித்து பல்வேறு சந்தர்ப்பத்தில் வெளிப்படையாகவே சுட்டிக்காட்டி வந்தார். மேலும் பிரசாத், ராபின்சிங் நீக்கப்பட்ட பிறகு அணியின் பயிற்சியாளரான கேரி கிர்ஸ்டனுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் 'பவுலிங் கோச்'சை நியமித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு பிசிசிஐ வந்துள்ளது. பந்து வீச்சுப் பயிற்சியாளர் இல்லாதது குறையாக தெரிவதாக டோணியும் கூறியுள்ளார். பயிற்சியாளராக யாரை நியமிக்கலாம் என வீரர்களுடன் பிசிசிஐ விரைவில் விவாதித்து முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.
தென்னாப்பிரிக்காவின் ஆலன் டொனால்டு, எரிக் சைமன்ஸ் ஆகியோரில் ஒருவர் இந்திய அணியின் பவுலிங் கோச்சாக நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications