For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம ஊரு ஃசெப் செஞ்ச வேலைய பாருங்க... நாக்குல எச்சில் ஊறவைச்சிட்டாரு

மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார்.

Recommended Video

2011 World cup final match re-telecast in Star Sports today

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் அனைத்து வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள், பல்வேறு பொழுது போக்குகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயங்க் அகர்வாலும், கிரிக்கெட் தவிர்த்து தன்னுடைய பிரத்யேக திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் சமையல் செய்யும் வீடியோவை தற்போது பிசிசிஐ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

துவக்க ஆட்டக்காரர் மயங்க்

துவக்க ஆட்டக்காரர் மயங்க்

கடந்த 2018 டிசம்பரில் மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தை துவக்கிய மயங்க் அகர்வால், முதல் 2 இன்னிங்சில் 76 மற்றும் 42 ரன்களை குவித்து கவனம் பெற்றார். இதையடுத்து திரும்பி பார்க்க நேரமில்லாமல் டெஸ்ட் போட்டிகளின் முக்கியமான வீரராக அவர் அதிரடி காட்டி வருகிறார். பல போட்டிகளில் சதம், அரைசதம் அடித்து வருகிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதங்களையும் இவர் அடித்துள்ளார்.

வீட்டிற்குள் முடங்கிய மயங்க்

வீட்டிற்குள் முடங்கிய மயங்க்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வீட்டிலேயே முடங்கியுள்ள சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், மயங்க் அகர்வாலும் அதிலிருந்து தப்ப முடியாமல் வீட்டில் முடங்கியுள்ளார். ஆனால், அவர் இதை கண்டெல்லாம் அசரவில்லை. தன்னுடைய பொழுதுகளை இனிமையாக கழிக்க தன்னுடைய சமையல் திறமையை தற்போது உபயோகப்படுத்தி வருகிறார் மயங்க்.

பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்து அசத்தல்

பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்து அசத்தல்

இந்நிலையில், பட்டர் கார்லிக் மஷ்ரூம் என்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும் உணவை செய்துக் காட்டி அசத்தியுள்ளார் மயங்க். அதன் செய்முறையுடன் அவர் செய்து காட்டியுள்ள இந்த டிஷ், காண்பவர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது அந்த வீடியோ. அந்த டிஷ்ஷை பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும்வகையில் உள்ளது.

ஃசெப் மயங்க் அகர்வாலை பாருங்க

ஃசெப் மயங்க் அகர்வாலை பாருங்க

மயங்க் அகர்வால் சமையல்காரராக மாறியுள்ள இந்த வீடியோவை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும் ஃசெப்பாக மாறியுள்ள மயங்க் அகர்வாலை சந்திக்கலாம் வாங்க என்றும் ரசிகர்களை கூப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடி நேரத்தில், தன்னுடைய சமையல் திறமையால், பொழுதை உபயோகமாக கழிக்கும் அவரை பாராட்டி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

Story first published: Thursday, April 2, 2020, 11:46 [IST]
Other articles published on Apr 2, 2020
English summary
Mayank Agarwal Showcases Culinary Skills, Prepares "One Awesome Dish"
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+