வீரர்களை கவர்ந்த ஒரே ஒரு உணவு..விருந்து வைக்கும் பிசிசிஐ..வெளுத்து கட்டும் பாண்ட்யா பிரதர்ஸ்-வீடியோ
மும்பை: இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா 'ஏ' அணி வீரர்கள் அனைவருக்கும் அட்டகாசமான விருந்து வைத்து அசத்தி வருகிறது பிசிசிஐ.
இளம் வீரர்களை கொண்ட இந்திய 'ஏ' அணி வரும் ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
டி20 உலகக்கோப்பை நெருங்கி வருவதால், அதற்கான வீரர்கள் தேர்வுக்காக இந்த சுற்றுப்பயணத்தை பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது.

இலங்கை தொடர்
இந்திய அணி வரும் ஜூலை 13ம் தேதி முதல் இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாகவும், புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாகவும் செயல்படவுள்ளனர். ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக செயல்படவுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 20 வீரர்கள் இந்த தொடரில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

போட்டி அட்டவணை
கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் இலங்கைக்கு செல்வதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் அனைவரும் மும்பையில் உள்ள தனியார் ஓட்டலில் 14 நாட்கள் பபுளில் உள்ளனர். அந்த குவாரண்டைன் நாளையுடன் முடிந்து நாளை இரவு அல்லது, நாளை மறுநாள் அதிகாலை அவர்கள் இலங்கைக்கு செல்லவுள்ளனர்.

வீரர்கள் உணவு முறை
பொதுவாகவே இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் எதுபோன்ற உணவுகளை எடுத்துக்கொள்வார்கள் என்ற சந்தேகம் ரசிகர்களிடம் இருக்கும். ஒவ்வொரு வீரர் குறித்தும் ஒவ்வொரு தகவல்கள் வெளியாகும். இந்நிலையில் மும்பை ஹோட்டலில் குவாரண்டைன் இருக்கும் இந்திய வீரர்கள் அனைவரையும் ஒரே ஒரு சைவ உணவு கவர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. 'டாக் மாக்' என்ற பெயர் கொண்ட அந்த உணவை செய்வது குறித்து பிசிசிஐ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஹோட்டல் சமையல் கலைஞர் ஒருவர் மாக் டக் குறித்து விளக்கமளித்து அதனை செய்தும் காட்டியுள்ளார்.

விருப்பமான உணவு
அந்த உணவு குறித்து பேசிய அவர், டாக் மக் ஒரு நல்ல சைவ உணவு மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட உணவாகும். இது சஞ்சு சாம்சனுக்கு மிகவும் பிடித்த உணவுவகையாகும். பாண்ட்யா சகோதரர்கள் நாளொன்றுக்கு 2 அல்லது 3 முறை ஆர்டர் செய்து உண்பார்கள். ஷிகர் தவானையும் முயற்சி செய்து பார்க்க சொன்னேன், அதிலிருந்து அவருக்கும் அது பிடித்து விட்டது.

போட்டி அட்டவணை
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி, முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும் டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது.


Click it and Unblock the Notifications