ஒரு வீரருக்காக இப்படி ஒரு குழப்பமா? திக்கு முக்காடும் பிசிசிஐ.. இந்திய அணியில் என்னதான் நடக்கிறது??
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு அதிகாரிகள் முடிவெடுக்க முடியாமல் திக்கு முக்காடி வருகின்றனர்.
Recommended Video
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி வரும் அக்டோபர் 6ம் தேதியன்று ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது.

பும்ராவுக்கு மாற்று
உலகக்கோப்பை தொடங்குவதற்கு 2 வார காலமே இருக்கும் சூழலில் இன்னும் அணி வீரர்கள் மீது பிசிசிஐ உறுதியாக இல்லை. இதற்கு காரணம் பவுலிங் யூனிட் தான். புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் பவுலிங் பெரியளவில் எடுபடவில்லை. நம்பிக்கை நாயகன் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்டுள்ள காயத்தால் முதல் சில போட்டிகளில் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.

பிசிசிஐ முடிவு
இதன் காரணமாக பேக் அப் என்ற பெயரில் வீரர்களை குவித்து வருகின்றனர் பிசிசிஐ அதிகாரிகள். ஏற்கனவே பேக் அப் வீரர்களாக முகமது ஷமி மற்றும் தீபக் சஹார் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் ஷமி தயாராக உள்ளாரா என்பதே சந்தேகம் தான். எனவே பும்ராவுக்கு மாற்று எனக்கூறி முகமது சிராஜ் இந்தியாவின் திட்டத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

மேலும் 2 பேர்
இந்நிலையில் இன்று காலை மேலும் 2 வீரர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதாவது வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் வலைப்பயிற்சி பவுலராக அணியுடன் அழைத்து செல்லப்படவுள்ளார். இவருடன் சேர்த்து இளம் பவுலர் குல்தீப் சென் -ம் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இவர்கள் அனைவருமே 6ம் தேதியன்று இந்திய மெயின் அணியுடனே ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

சிக்கலில் பிசிசிஐ
ஜஸ்பிரித் பும்ராவும் காயத்தில் உள்ளதால், யாரை கொண்டு வந்தால் இந்திய அணி சிறப்பாக இருக்கும் என பிசிசிஐ முடிவெடுக்க முடியாமல் பலரையும் சேர்த்து குழப்பிக்கொண்டுள்ளது. இதற்காக நடைபெறும் தொடர் ஆலோசனைகளால், தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications