For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முகமது ஷமி விஷயத்தில் விலகாத மர்மம்.. டி20 உலகக்கோப்பை ப்ளானில் பெரும் ஏமாற்றம்.. தற்போதைய நிலை என்ன

ஐதராபாத்: இந்திய அணியின் டி20 உலகக்கோப்பை திட்டத்தில் பெரும் திருப்புமுனையாக முகமது ஷமி அமைந்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியுடனான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி கட்ட பயிற்சியாக பார்க்கப்படும் இதில் வெற்றி பெற்றது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி தான். எனினும் இன்னும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகவில்லை என்று தான் கூற வேண்டும்.

சுமாரான பவுலிங்

சுமாரான பவுலிங்

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவின் பவுலிங், ஆஸ்திரேலிய தொடரிலும் அதையே தான் செய்துள்ளனர். முன்னணி வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்த போதும் பழைய ஃபார்முக்கு வரவில்லை. குறிப்பாக கடைசி 4- 5 ஓவர்களில் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.

ஷமி உடல்நிலை

ஷமி உடல்நிலை

இந்த சொதப்பலால் ரசிகர்கள் அனைவரின் பார்வையும் தற்போது முகமது ஷமியின் பக்கம் திரும்பியுள்ளது. டி20 உலகக்கோப்பையில் பேக் - அப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஷமி, ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்கவிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் கொரோனா உறுதியானது. 7 நாட்கள் குவாரண்டைன் முடிந்த போதிலும் அவரின் உடல் நிலை என்னவென்பது குறித்த எந்தவித முடிவுக்கும் பிசிசிஐ-ஆல் இன்னும் வர முடியவில்லை.

கடைசி வாய்ப்புகள்

கடைசி வாய்ப்புகள்

வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய களத்தில் ஷமியின் பவுலிங் ஸ்டைல் நன்கு பொருந்தும். ஆனால் கடந்த ஒரு வருடமாக டி20 கிரிக்கெட்டே ஆடாத ஷமி உலகக்கோபைக்கு தயாராக வேண்டியது அவசியம். எனவே அவருக்கு கடைசியாக உள்ள ஒரே ஒரு வாய்ப்பு தென்னாப்பிரிக்க தொடர் மட்டும் தான்.

 தென்னாப்பிரிக்க சீரிஸ்

தென்னாப்பிரிக்க சீரிஸ்

இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணியுடன் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் மோதுகிறது. இந்த போட்டிகள் வரும் செப்டம்பர் 28 முதல் தொடங்கவுள்ளது. எனவே இந்த தொடரில் முகமது ஷமி வந்துவிட்டால், அவர் உலகக்கோப்பையில் விளையாடலாம். இல்லையெனில் மாற்றுத்திட்டத்துடன் இந்தியா களமிறங்கலாம்.

Story first published: Monday, September 26, 2022, 17:23 [IST]
Other articles published on Sep 26, 2022
English summary
Team India in Confusion over Mohammed shami's Fitness ahead of South africa t20 series
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+