Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரை டீம்ல எடுத்தே ஆகணும்.. கேப்டன் பிடிவாதம்.. அணித் தேர்வையே நிறுத்திய பிசிசிஐ.. கசிந்த தகவல்!

Recommended Video

Kohli wants Hardik Pandya in the odi squad

மும்பை : ஹர்திக் பண்டியாவை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார் கேப்டன் விராட் கோலி என தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக ஹர்திக் பண்டியா இன்னும் அறுவை சிகிச்சைக்குப் பின் முழு அளவில் பந்துவீச்சில் தயாராகவில்லை என கூறப்பட்டது. அதனால், அவர் நியூசிலாந்து செல்லும் இந்தியா ஏ அணியில் இடம் பெறவில்லை.

அணித் தேர்வு நிறுத்தம்

அணித் தேர்வு நிறுத்தம்

இந்த நிலையில், அவரை எப்படியும் அணியில் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற முடிவில் இந்தியா அணி நிர்வாகம் இருப்பதால், நியூசிலாந்து தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணித் தேர்வை நிறுத்தி வைத்துள்ளது பிசிசிஐ.

டி20 அணி அறிவிப்பு

டி20 அணி அறிவிப்பு

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெறும் டி20 தொடருக்கான இந்திய அணியை மட்டுமே அறிவித்தது தேர்வுக் குழு. ஹர்திக் பண்டியா நிலை தெரிந்த பின்னரே ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணித் தேர்வு நடைபெறும் என தெரிகிறது.

என்ன தான் நடந்தது?

என்ன தான் நடந்தது?

ஹர்திக் பண்டியா விஷயத்தில் அப்படி என்ன தான் நடந்தது? பண்டியா கடந்த நான்கு மாதங்களாக முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்தார்.

பயிற்சி

பயிற்சி

அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி பெறாமல் தனிப்பட்ட முறையில் ரஜினிகாந்த் என்ற உடற்பயிற்சி நிபுணரை நியமித்து பயிற்சி பெற்று வந்தார். நீண்ட பயிற்சிகளுக்குப் பின் பண்டியா மீண்டும் இந்திய அணியில் இணைய தயார் ஆனார்.

அறிக்கை

அறிக்கை

நியூசிலாந்து நாட்டுக்கு செல்லும் இந்தியா ஏ அணியில் பண்டியா இடம் பெற இருந்தார். அப்போது அந்த உடற்பயிற்சி நிபுணர், பண்டியா இன்னும் சர்வதேச அளவில் பந்துவீசுவதன் மூலம் ஏற்படும் பணிச்சுமையை சமாளிக்க தயார் ஆகவில்லை என பிசிசிஐக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

கேப்டன் உறுதி

கேப்டன் உறுதி

அதனால், இந்தியா ஏ அணியில் அவர் சேர்க்கப்படவில்லை. எனினும், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் ஹர்திக் பண்டியா நிச்சயம் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

அடுத்த திட்டம்

அடுத்த திட்டம்

அதன் காரணமாக, தற்போது ஹர்திக் பண்டியா, ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு பயிற்சி செய்து வரும் இந்திய அணியுடன் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், விரைவில் ஒரு ரஞ்சி தொடர் போட்டியிலும் ஆட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பிசிசிஐ தீவிரம்

பிசிசிஐ தீவிரம்

ஹர்திக் பண்டியா பந்துவீச்சு மற்றும் உடற்தகுதியை தொடர்ந்து கண்காணித்து, தயார்ப்படுத்தி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் சேர்க்க பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.

நியூசிலாந்து ஆடுகளங்கள்

நியூசிலாந்து ஆடுகளங்கள்

கோலி ஏன் பண்டியாவை டெஸ்ட் அணியில் சேர்ப்பதில் பிடிவாதமாக இருக்கிறார்? என்பது பற்றிய கேள்விக்கு, நியூசிலாந்து நாட்டின் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேவை

வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் தேவை

ஹர்திக் பண்டியா வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என்பதால் அவர் அணியில் இருந்தால் கூடுதல் வேகப் பந்துவீச்சாளராக பயன்படுத்த முடியும். அதுதான் அவரை நிச்சயம் அணியில் சேர்த்தே தீர வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தி உள்ளது.

Story first published: Monday, January 13, 2020, 16:00 [IST]
Other articles published on Jan 13, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+