Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.க்கு நோ என்ட்ரி.. ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ போட்ட கண்டிஷன்.. பழிவாங்கும் நடவடிக்கையா?

பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ போட்டுள்ள கண்டிஷன் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்திக் பாட்ணடியா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பெரும்பாலான போட்டியில் விளையாடவில்லை.

ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், அவர் பயிற்சியின் போது பந்துவீசி வருவதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி பொய் சொன்னது.

பிசிசிஐ கோபம்

பிசிசிஐ கோபம்

இதனை நம்பி , ஹர்திக் பாண்டியாவை உலக கோப்பை அணியில் பிசிசிஐ சேர்த்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா காலை வாரினார். இதனால் பிசிசிஐ-யின் கோபத்திற்கு ஹர்திக் பாண்டியா ஆளாகினார். இதனால் ஹர்திக் பாண்டியா உடல் தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் தம்மை எந்த தொடரிலும் தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறினார்.

உடல் தகுதி

உடல் தகுதி

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் பரோடாவில் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில், உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி என்று பிசிசிஐ கூறியது. இதனால் பாண்டியாவும் பெங்களூரு சென்றார்.

10 ஓவர்

10 ஓவர்

ஆனால், அங்கு தான் பாண்டியாவுக்கு பிசிசிஐ ஒரு செக் வைத்துள்ளது. அதன் படி உடல் தகுதியை நிரூபிக்க பேட்டிங் மற்றும் யோ யோ டெஸ்டில் வென்றால் போதும். ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டர் என்பதால், வலைப் பயிற்சியில் தொடர்ந்து 10 ஓவர் வீச வேண்டும். பேட்டிங் பயிற்சி மற்றும் யோ யோ டெஸ்டில் வெற்றி என்று மூன்றிலும் வென்றால் மட்டுமே ஐபிஎல் போட்டிக்கு அனுமதி என்று கூறிவிட்டது.

Recommended Video

IPL-ல் Suresh Raina-வின் அடுத்த அவதாரம்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
பங்கேற்க முடியாது

பங்கேற்க முடியாது

ஏற்கனவே குஜராத் அணிக்கான ஐபிஎல் பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து 2 மணி நேரம் வரை பந்துவீசியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும் அவர் பழைய மாதிரி இன்னும் பந்துவீசவில்லை. 75 சதவீதம் மட்டும் தான் தேறியுள்ளார் . இந்த தகவல் உடல்தகுதி சோதனையில் பிசிசிஐக்கு தெரிய வந்தால் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது.

Story first published: Wednesday, March 16, 2022, 16:29 [IST]
Other articles published on Mar 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+