Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல் முக்கிய விதிகள் மாற்றம்.. தோனி உள்ளிட்ட கேப்டன்களுக்கு எச்சரிக்கை.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

மும்பை: ஐபிஎல் 15வது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

போட்டியை சிறப்பாக நடத்துவது குறித்து மகாராஷ்டிரா மாநில அரசு அதிகாரிகளுடன் பிசிசிஐ இன்று முக்கிய ஆலோசனை நடைபெற்றது.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் கடைபிடிக்கப்படும் விதிகள் குறித்து கேப்டன் மற்றும் அணி நிர்வாகிகளுக்கு பிசிசிஐ சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதிய விதி

புதிய விதி

பெரும்பாலும், ஐசிசி விதிகளின் படி தான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். கடந்த ஐனவரி மாதம், போட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் முடியவில்லை என்றால் பவுண்டரி லைனில் 5 வீரருக்கு பதிலாக 4 வீரராக குறைக்கப்படும் என்ற விதி அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த விதியும் நடப்பு ஐபிஎல் சீசனில் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

90 நிமிடம்

90 நிமிடம்

ஆனால், இந்த விதியை பிசிசிஐ நடப்பு ஐபிஎல் தொடரில் அமல்படுத்தவில்லை. ஆனால், ஒரு இன்னிங்சிற்கு விக்கெட் விழுந்தால் புதிய பேட்ஸ்மேன்கள் மாறுவதற்குள், Strategy Time out ஆகிய நேரம் போக 90 நிமிடத்தில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டிப்பு

கண்டிப்பு

ஒரே தொடரில் லீக் சுற்றில் 3 முறை இந்த தவறை செயதால், ஒரு போட்டியில் பங்கேற்க கேப்டனுக்கு தடை விதிக்கப்படும் என்றும், இம்முறை இது கண்டிப்பான முறையில் கடைபிடிக்கப்படும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. இதே போன்று பயோ பபுளை அணி நிர்வாகம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recommended Video

IPL 2022 Auction: Gujarat Titans SWOT Analysis | Aanee Cricket | OneIndia Tamil
அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

பந்தை எச்சிலால் தடவ கூடாது என்றும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. வீரர்கள் மைதானத்தில் செல்போன் பயன்படுத்த கூடாது, தெரியாதவர்களிடமிருந்து பரிசு பொருட்கள் வாங்க கூடாது, மேட்ச் பிக்சிங் தொடர்பாக தரகர்கள் தொடர்பு கொண்டால், உடனே அதனை பிசிசிஐயிடம் தெரிவிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளை பிசிசிஐ கூறியுள்ளது.

Story first published: Wednesday, March 2, 2022, 16:32 [IST]
Other articles published on Mar 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+