
கோல்டன் டக்
ஐபிஎல் தொடருக்கு பிறகு கேஎல் ராகுல், கடந்த 28ஆம் தேதி தான் முதல் முறையாக டி20 போட்டியில் களமிறங்கினார். இதில் ராகுல் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இது தேர்வுக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எச்சரிக்கை
கேஎல் ராகுலுக்காக இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்டை, பிளேயிங் லெவனிலிருந்து ரோகித் சர்மா நீக்கினார். தற்போது ராகுல் சொதப்பியதால், அவரது இடம் அணியில் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தன்னுடைய ஃபார்மை ராகுல் நிரூபிக்கவில்லை என்றால், அடுத்த போட்டியில் நீக்கப்படுவார் என்ற எச்சரிக்கையை தேர்வுக்குழு விடுத்துள்ளது,

குற்றச்சாட்டு
இதனையடுத்து கேஎல் ராகுல் இன்று தீவிர பயிற்சியை மேற்கொண்டார். டிராவிட் கண்காணிப்பில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ராகுலுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு வழங்கப்பட்டது. ராகுல் டி20 போட்டியில் தனது திறமையை பலமுறை நிரூபித்து இருந்தாலும், அவர் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டே முக்கிய போட்டியில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விடுகிறார் என்பது தான்.

இடத்திற்கு ஆபத்து
இதே போன்று 2வது குற்றவ்சசாட்டாக ராகுல் குறைந்த பந்தில் அதிக ரன்கள் எடுக்ககாமல், 60 பந்துகளை பிடித்து 70 ரன்கள் அடிக்கிறார் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. ராகுல் தனது ஸ்டைலை மாற்றி கொண்ட அணியில் சூழலுக்கு ஏற்ப விளையாடவில்லை என்றால், அவருடைய இடம் அவருக்கு கிடையாது.


Click it and Unblock the Notifications