Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பயந்ததை போலவே நடக்குதே”.. இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. பிசிசிஐ எடுத்த அட்டகாச முடிவு!

நாக்பூர்: பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணி அநியாயமாக நடந்துக்கொள்வதாக ஆஸ்திரேலிய வீரர்கள் குற்றம்சாட்டி வரும் சூழலில் அவர்கள் பயந்ததை போன்றே தான் ஒரு சம்பவம் நடக்கவுள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் பிப்ரவரி 9ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1ம் தேதியன்றே இந்தியாவுக்கு வந்தடைந்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். அங்கு நாக்பூரில் உள்ளதை போன்றே பிட்ச்-ஐ உருவாக்கி அதில் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்திய வீரர்கள் பயிற்சி

இந்திய வீரர்கள் பயிற்சி

மறுபுறம் இந்திய அணி நேரடியாக நாக்பூருக்கே சென்றடைந்து அங்குள்ள பழைய விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின், முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் வந்துவிட்டனர். திருமணத்திற்காக விடுப்பில் இருந்த கே.எல்.ராகுலும் மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

இந்நிலையில் பயிற்சிக்காக பிசிசிஐ கொடுத்துள்ள சர்ப்ரைஸ் ஒன்று அனைவருக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ரஞ்சிக்கோப்பையில் கலக்கி வரும் இளம் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார், சௌரஃப் குமார், சாய் கிஷோர் ஆகிய 4 வீரர்களையும் பெங்களூருவுக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்களை வலைப்பயிற்சி பவுலர்களாக பயன்படுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

8 ஸ்பின்னர்கள்

8 ஸ்பின்னர்கள்

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பிசிசிஐ அழைத்துள்ள 4 பேருமே ஸ்பின்னர்கள் ஆகும். இந்திய அணியில் ஏற்கனவே ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், ஜடேஜா, குல்தீப் யாதவ் என 4 முன்னணி ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே ஸ்பின்னர்களை வைத்து இந்திய பேட்ஸ்மேன்கள் பயிற்சி பெற்று வரும் நிகழ்வு தான் நடந்து வருகிறது. ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரை கூட பிசிசிஐ அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் உறுதி

திட்டம் உறுதி

இந்திய களம் ஏகபோகத்திற்கு ஸ்பின் ஆகிறது, அநியாயமாக நடந்துக்கொள்கிறார்கள் என ஏற்கனவே ஆஸ்திரேலிய வீரர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் இந்த முறையும் அதீத ஸ்பின்னுக்கு தகுந்தபடி தான் பிட்ச்கள் இருக்கும் என்பது பிசிசிஐ-ன் நடவடிக்கை மூலமே தெரிகிறது. எது எப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு சுவாரஸ்ய விருந்து காத்துள்ளது.

Story first published: Saturday, February 4, 2023, 8:03 [IST]
Other articles published on Feb 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+