Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அகர்கர் வேலைதான் எல்லாமே.. கம்பீர் மேல் கையே வைக்க மாட்டோம்.. பிசிசிஐ எடுத்த முடிவு.. பின்னணி என்ன?

மும்பை: தென்னாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், பிசிசிஐ நிர்வாகம் கம்பீரை விட்டுவிட்டு, தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கரை குறிவைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா என அடுத்தடுத்து இரண்டு 'ஒயிட்வாஷ்' தோல்விகளைச் சந்தித்த பிறகும், கவுதம் கம்பீரின் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

BCCI Targets Ajit Agarkar Spares Gautam Gambhir After Test Debacle Focus on Excessive Dependency on All-Rounders

ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு கடந்த ஜூலை மாதம் தான் கவுதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2027 வரை உள்ளது. தற்போது அணியின் செயல்பாடு மோசமாக இருந்தாலும், கம்பீரை பாதியிலேயே நீக்கும் எண்ணம் பிசிசிஐக்குத் துளியும் இல்லை என்று 'டைனிக் ஜாக்ரன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2027 உலகக்கோப்பை வரை அவரே பயிற்சியாளராகத் தொடருவார் என்று கூறப்படுகிறது.

கம்பீரை காப்பாற்றிய பிசிசிஐ, தனது கோபப்பார்வையைத் தேர்வுக் குழுவின் பக்கம் திருப்பியுள்ளது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவின் செயல்பாடுகள் மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் உள்ளது. குறிப்பாக, அணித் தேர்வில் "ஆல்-ரவுண்டர்கள் மீதான மோகம்" அளவுக்கு அதிகமாக இருப்பதாக பிசிசிஐ கருதுகிறது.

சமீபத்தில் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை பிசிசிஐ சுட்டிக்காட்டியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் 3 சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள் (ஜடேஜா, அஸ்வின், அக்சர்) களமிறக்கப்பட்டனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களை எடுக்காமல், ஆல்-ரவுண்டர்களை வைத்து அணியை நிரப்புவது பலனளிக்கவில்லை. இந்த ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதுவே தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்ததாக பிசிசிஐ நினைக்கிறது. இந்தத் தவறான அணுகுமுறைக்காகத் தேர்வுக் குழு விரைவில் கேள்வி கேட்கப்படலாம்.

இதற்கிடையில், ஒருநாள் தொடர் முடிந்ததும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், டி20 தொடர் தொடங்குவதற்கு முன்பு அப்படி எந்த ஆலோசனைக் கூட்டமும் நடைபெறாது என்று தற்போது தெரியவந்துள்ளது. பிசிசிஐ இதுவரை ரோஹித் மற்றும் கோலியிடம் அவர்களது எதிர்காலம் குறித்துப் பேசவில்லை.

Story first published: Sunday, November 30, 2025, 10:14 [IST]
Other articles published on Nov 30, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+