Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த 11 பேர்.. இவங்கதான் இனிமே பிளேயிங் லெவன்.. பிசிசிஐ எடுக்க போகும் பிரம்மாஸ்திரம்.. செம டிவிஸ்ட்?

சிட்னி: இந்திய அணியில் வருங்கால டெஸ்ட் போட்டிகளில் ஆட போகும் வீரர்கள் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாக தொடங்கி உள்ளது.

ஆஸ்திரேலியா இந்தியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்து பெரிய அளவில் அதிர்ச்சி அளித்துள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிக மோசமாக ஆடி டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்விவை தழுவி உள்ளது.

முதல் இன்னிங்சில் 244 எடுத்த இந்திய அணி அடுத்த இன்னிங்சில் வெறும் 36 ரன்கள் எடுத்து மிக மோசமான ஆட்டம் ஆடியது. முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி அடுத்த இன்னிங்சில் 2 விக்கெட்டில் 93 ரன்கள் எடுத்து வென்றது.

நிலைமை என்ன

நிலைமை என்ன

இந்த நிலையில் இந்திய அணியில் வருங்கால டெஸ்ட் போட்டிகளில் ஆட போகும் வீரர்கள் யார் என்பது குறித்த செய்திகள் வெளியாக தொடங்கி உள்ளது. தற்போது ஆஸ்திரேலிய தொடரில் இருக்கிற வீரர்களை வைத்தே இந்திய அணி விளையாடும். ஆனால் வரும் இங்கிலாந்து தொடரில் மொத்தமாக வீரர்கள் மாற்றப்பட உள்ளனர்.

மாற்றம்

மாற்றம்

இந்திய அணியில் பொதுவாக டெஸ்ட், ஒருநாள், டி 20 தொடருக்கு வேறு வேறு அணிகள் களமிறக்கப்படுகிறது. ரோஹித் சர்மா, தவான் போன்ற வீரர்கள் டெஸ்ட் அணியில் எடுக்கப்படுவது இல்லை. இன்னொரு பக்கம் அஸ்வின் போன்ற வீரர்கள் ஒருநாள் அணியில் எடுக்கப்படுவது இல்லை. இதை மொத்தமாக மாற்ற வேண்டும் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

பிசிசிஐ

பிசிசிஐ

இதன் பொருட்டு ஒருநாள் அணியிலும், டி 20 அணியிலும் நல்ல பார்மில் இருக்கும் சில வீரர்களை டெஸ்ட் அணியிலும் கொண்டு வருவதற்கு இந்தியா முடிவு செய்துள்ளது. அதன்படி ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இருவரும் டெஸ்ட் அணிக்குள் வர உள்ளனர். அதேபோல் ராகுலுக்கு டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என்கிறார்கள்.

அணி

அணி

வரும் இங்கிலாந்து தொடருக்கான உத்தேச டெஸ்ட் அணி விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்திய டெஸ்ட் அணியில் ராகுல், ரோஹித் ஓப்பனிங் இறங்க வாய்ப்புள்ளது. அதன்பின் புஜாரா, கோலி, ரஹானே, பாண்டியா, ஜடேஜா, அஸ்வின், பும்ரா, இஷாந்த் சர்மா, சைனி ஆகியோர் ஆட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

மாற்றம்

மாற்றம்

இந்த உத்தேச அணியில் சில மாற்றங்களை செய்ய வாய்ப்புள்ளது. இந்திய அணியில் சுப்மான் கில் சேர்க்கப்பட்டு, ராகுல் நீக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இந்த வீரர்கள்தான் அதிகம் இடம்பெற வாய்ப்புள்ளது. இவர்கள்தான் இனி பெரும்பாலும் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். அடுத்த வருடம் இந்திய அணியில் இவர்கள்தான் முக்கியத்துவம் பெறுவார்கள்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தொடரில் வீரர்களின் ஆட்டத்தில் பிசிசிஐ பெரிய அளவில் கோபத்தில் உள்ளது. இதன் காரணமாகவே முக்கியமான வீரர்களை மீண்டும் அணிக்குள் கொண்டு வர பிசிசிஐ நினைக்கிறது. இந்திய டெஸ்ட் அணியில் தவானை கொண்டு வரவும் பிசிசிஐ ஆலோசனைகளை செய்து வருகிறது.

Story first published: Sunday, December 20, 2020, 10:42 [IST]
Other articles published on Dec 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+