அடேங்கப்பா ரூ.963 கோடி வருமானம் போச்சே.. உலகக்கோப்பையை வைத்து பிசிசிஐ போட்ட திட்டம் நாசம்- என்ன ஆனது
மும்பை: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துவதால் இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.900 கோடி வரை நஷ்டத்தை எதிர்கொள்ள தயாராகிவிட்டது. இந்திய அரசின் விடாப்பிடி முடிவால் இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
2023ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தான் தற்போது இருந்தே இந்திய கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.
வழக்கமாக உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணைகளை ஒரு ஆண்டிற்கு முன்பாகவே ஐசிசி வெளியிட்டுவிடும். ஆனால் இந்த முறை போட்டிகள் நடைபெற 6 மாதங்கள் தான் உள்ளது என்ற சூழலிலும் வெளிவிடாமல் இருந்து வருகிறது. இதற்கு காரணம் வரி பிரச்சினைகள் தான்.

என்ன சிக்கல்
இந்தியாவில் உலகக்கோப்பைக்கான வரிவிலக்கு பிரச்சினை இருப்பதால் பிசிசிஐ-க்கு கடும் நெருக்கடி உருவாகியுள்ளது. அதாவது ஒருநாட்டில் உலகக்கோப்பை தொடர் நடத்த வேண்டும் என்றால் அந்நாட்டின் அரசு வைத்திருக்கும் வரிகளை கட்ட வேண்டும். தொகுத்து வழங்கும் வாரியங்கள், தங்கள் நாட்டின் அரசிடம் கேட்டு வரிவிலக்கை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் பிசிசிஐ-ன் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்காமல் இருந்து வருகிறது.

வரி தொகை
ஒருவேளை வரிவிலக்கு கிடைக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட வாரியம் தான் அந்த வரியை செல்லுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி தான் 206ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின் போது பிசிசிஐ ரூ.190 கோடியை செலுத்தியது. ஆனால் தற்போது ரூ.963 கோடி செலுத்தவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தாண்டுக்கான உலகக்கோப்பை ஒளிபரப்பு மூலம் 533.29 மில்லியன் டாலர்கள் வருமானம் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து 21.84 % இந்திய அரசு வரியாக விதிக்கிறது.

சொதப்பிய திட்டம்
இதனை எப்படியாவது மத்திய அரசிடம் கேட்டு 10 சதவீதமாக குறைக்க இந்திய வாரியம் போராடியது. ஆனால் மத்திய அரசு எந்தவித இரக்கமும் காட்டாததால் 20.84%, அதாவது ரூ. 963 கோடியை பிசிசிஐ பொறுப்பேற்று கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பை நடத்துவதன் மூலம் பிசிசிஐ-க்கு வரக்கூடிய வருமானத்தில் பெரும் பங்கு வரிகளுக்கே சென்றுவிடும்.

மாற்று ஏற்பாடு
இந்த வரியை கட்ட இந்திய கிரிக்கெட் வாரியம் தவறும் பட்சத்தில் உலகக்கோப்பை வேறு நாட்டிற்கு சென்றுவிடும். இது கவுரவப்பிரச்சினையாக ஆகிவிடும் என்ற காரணத்தால் பிசிசிஐ ரிஸ்க் எடுத்துள்ளது. இதனை ஈடுகட்டும் தொகைகளை ஐபிஎல் தொடரின் மூலம் பெற்றுவிடுவதற்கான திட்டங்களையும் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications