Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டில் வந்தது புது சாஃப்ட்வேர்.. இனி வீரர்கள் தப்பிக்கவே முடியாது.. பிசிசிஐ அதிரடி முடிவு!!

ட்ரினிடாட்: கிரிக்கெட் வீரர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க பிசிசிஐ புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிசிசிஐ-ன் உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் உள்நாட்டு போட்டிகளை மேம்படுத்துவது, வீரர்களின் சம்பள உயர்வு, புதிய விதிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

 புதிய சாஃப்ட்வேர் அறிமுகம்

புதிய சாஃப்ட்வேர் அறிமுகம்

இதில் குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தங்களது வயதை குறைத்து கூறி முறைகேடுகளில் ஈடுபடுவது குறித்து நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிக வயதுள்ள வீரர்கள், U 16 அல்லது U19 தான் எனக்கூறி விளையாடுகிறார்கள். இதுபோன்ற வழக்குகளும் சமீபத்தில் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் அதனை தடுப்பதற்காக புதிய சாஃப்ட்வேர் கொண்டு வரப்பட்டுள்ளது.

இனி 3 ஆண்டு ஒப்பந்தம்

இனி 3 ஆண்டு ஒப்பந்தம்

இதே போல மாநில கிரிக்கெட் வாரியங்களுக்கும் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது மாநில அணிகளுக்கு தேர்வாகும் வீரரை 3 ஆண்டுகளுக்கு கட்டாய முறையில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஒன்று அல்லது 2 ஆண்டுக்கு மட்டுமே போடப்பட்டு வரும் ஒப்பந்த காலத்தை நீடிப்பதால், வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சம்

சிறப்பம்சம்

உயரிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள போன் எக்ஸ்பெர்ட் என்ற சாஃப்ட்வேரை அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் வீரர்கள் வயது முறைகேடுகளில் ஈடுபடுவதை சுலபமாக கண்டறிய முடியும். மிகவும் குறைந்த செலவில் வீரரின் வயதை சரிபார்க்கும் என்பதால் இந்த சாஃப்ட்வேர் இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

DRS முறை

DRS முறை

இந்தியாவின் மிகப்பிரபலமான ரஞ்சிக்கோப்பை தொடர் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி ரஞ்சிக்கோப்பை தொடரிலும் விக்கெட்டை, மேல் முறையீடும் செய்யும் வகையில் டிஆர்எஸ் முறை கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பயர்களின் முடிவுகளில் சர்ச்சை ஏற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Story first published: Saturday, July 23, 2022, 13:47 [IST]
Other articles published on Jul 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+